பெண்களுடன் டிரம்ப் போஸ்.. அமெரிக்காவே அலறவிடும் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் விவகாரம்.. பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவையே உலுக்கி வரும் ஜெஃப்ரின் எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது. ஜெஃப்ரின் எப்ஸ்டீன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான், அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப், ஸ்டீவ் பேனன், பில் கிளிண்டன், லாரி சம்மர்ஸ், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் வூடி ஆலன் உள்ளிட்டவர்களுடன் ஜெஃப்ரின் எப்ஸ்டீன் சேர்ந்து இருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயக கட்சியினர் அடங்கிய ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி நேற்று திடீரென்று போட்டோ ஆவணங்களை வெளியிட்டது. அது பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் எஸ்டேட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களாகும்.

மொத்தம் 19 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 போட்டோக்களில் டொனால்ட் டிரம்ப் உள்ளார். குறிப்பாக பெண்களுடன் அவர் சேர்ந்து இருக்கிறார். அதேபோல் இன்னொரு போட்டோவில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் - டொனால்ட் டிரம்ப் பேச அருகே ஒரு பெண் உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தவிர ஆளும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த ஸ்டீவ் பேனன், பில் கிளிண்டன், லாரி சம்மர்ஸ், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் வூடி ஆலன் உள்ளிட்டவர்களுடன் ஜெஃப்ரின் எப்ஸ்டீன் சேர்ந்து இருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதனால் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான முழு வழக்கு விவரங்கள் மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இதனை மறுத்து வருகிறார். ‛‛ஒரு நிகழ்வில் புகைப்படம் எடுப்பதென்பது குற்றத்தில் ஈடுபட்டதாக ஆகாது. ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது உறவு 2004 ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. அவரது முதல் கைதுக்கு முன்பே எங்களின் உறவு முடிந்துவிட்டது'' என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை நீண்டகாலமாகவே ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்த விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து டிரம்ப் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான போட்டோக்களை வெளியிட்டு வருகிறது.
இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. ஜெஃப்ரின் எப்ஸ்டீனை எடுத்து கொண்டால் பெரும் பணக்காரர். அதேவேளையில்பாலியல் குற்றவாளி. பெரும் நிறுவனங்களுக்கு வங்கிகளிலிருந்து நிதியை பெற்று தரும் பணியை செய்தார். அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் என்று பெரிய பெரிய ஆட்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்க விர்ஜின் தீவுகளில் 2யை வாங்கினார். 1998ல் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்என்ற தீவையும், 2016ல் கிரேட் செயின்ட் ஜேம்ஸ் தீவையும் வாங்கினார். இந்த தீவுகளில் தான் அவர் பெண்கள், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2005ம் ஆண்டு முதல் இவர் மீது பல குற்றச்சாட்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கில் 2008ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கடந்த 2019ல் மீண்டும் கைது செய்யப்பட்டார் எப்ஸ்டீன். அதன்பிறகு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே கதையை முடித்ததாக சொல்லப்படுகிறது.
எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களில் (எப்ஸ்டீன் பைல்கள்) பல பிரபலமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இவரது வழக்கு ஆவணங்கள் பொது வெளியில் பகிரப்படவில்லை.
இந்த ஆவணங்களில் டிரம்ப்பின் பெயர் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வரும் நிலையில் டிரம்ப் அவருடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications