'தி அமெரிக்கன் பார்டி'.. புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார் எலான் மஸ்க்! டிரம்புக்கு சிக்கலா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கும் நிலையில், 'தி அமெரிக்கன் பார்டி' எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக மஸ்க் அறிவித்திருக்கிறார். இந்த கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்தால் டிரம்ப் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் இக்கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

டிரம்ப் 2024ல் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு 'அ முதல் ஃ' வரை எல்லாமுமாக இருந்தவர்தான் எலான் மஸ்க். நிதியுதவி தொடங்கி, பிரசாரங்கள், x தளத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது என மஸ்க் இறங்கி வேலை பார்த்தார். ஆனால், இப்போது இருவருக்கும் இடையில் முட்டிக்கொண்டிருக்கிறது.

Elon Musk Trump US

டிரம்ப் மீது அடுக்கடுக்காக எலான் மஸ்க் குற்றச்சாட்டுகளை அடுக்க, மஸ்க்கின் நிறுவனத்திற்கு அரசு வழங்கும் நிதி உதவியை நிறுத்துவோம் என்று டிரம்ப் பதிலடி கொடுக்க, அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த 'சூர்யா-தேவா' நட்பு பற்றிதான் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பஞ்சாயத்தை மஸ்க் அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி சென்றிருக்கிறார்.

நேற்று தனது x பக்கத்தில், "புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டா?" என்று கேள்வி எழுப்பி, கருத்துக்கணிப்பை பதிவிட்டிருந்தார். இதற்கு 80% பேர் ஆம் என்று பதிலளித்திருந்தனர். இதனையடுத்து "மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அமெரிக்காவில் 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை! இதுதான் விதி" என்று கூறி, கட்சியின் பெயரை 'தி அமெரிக்கன் பார்டி' என்றும் அறிவித்திருக்கிறார். நேற்றுவரை சோஷியல் மீடியாவில் சலசலப்பாக இருந்த இவர்களின் சண்டை, தற்போது அரசியல் போராக வெடித்திருக்கிறது.

அமெரிக்க அரசியல் ஏறத்தாழ நம்மூர் அரசியலை போல இருந்தாலும், அது முற்றிலும் வேறானது. அங்கு இரண்டு கட்சிகள்தான் தேர்தலில் போட்டியிடும். இப்படி இருக்கும்போது மூன்றாவதாக எலான் மஸ்க் கட்சி என்ன செய்யும் என்று கேள்வி எழுந்திருக்கிறது. மறுபுறம், ஜோ பைடன் கட்சியை காலி செய்யத்தான் மஸ்க்கை வைத்து, புது கட்சியை டிரம்ப் உருவாக்கியுள்ளார். இது அவரின் உள்குத்து வேலைதான் என்றும் சிலர் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

பஞ்சாயத்துக்கான காரணம் என்ன?:

அரசாங்கம் நிறைய செலவு செய்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று, 'செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ)' என்கிற புதிய துறையை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்கை நியமித்திருந்தார் டிரம்ப். எலான் மஸ்க்கும், ஏராளமான அரசு ஊழியர்களை வேலையை விட்டு துரத்தி, அவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொண்டு, செலவுகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

ஆனால், இப்போது 'பெரிய அழகான மசோதா' என்கிற பெயரில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார் டிரம்ப். இந்த மசோதாதான் பிரச்சனையே. அதாவது இந்த மசோதா வரிக்குறைப்பு அம்சத்தை முன்மொழிகிறது.

வரியை குறைத்தால் அரசுக்குதான் லாபம் குறையும். அப்புறம் எதுக்கு 'டிஓஜிஇ' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது? என எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார். அதிகாரத்தை பார்த்த கேள்வி எழுப்பினால் அது சும்மா இருக்குமா? டிரம்ப் காரமாக பதிலடி கொடுக்க, மஸ்க்கும் வாயை விட, இப்போது சண்டையாக முட்டிக்கொண்டு நிற்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+