வேலையை காட்டிய சீனா.. தங்கத்தை காலி செய்த வெள்ளி.. கதற ஆரம்பித்த எலான் மஸ்க்.! ஏன் இப்படி
வாஷிங்டன்: தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி விலையும் கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளிக்குச் சீனா விதித்த கட்டுப்பாடுகளே இதற்குப் பிரதானக் காரணமாகும். சீனா என்ன கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. வெள்ளி விலையேற்றம் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தை விட வேகமாக இப்போது வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. வெள்ளி ஏற்றுமதிக்குச் சீனா விதித்த கட்டுப்பாடுகளே இதற்குப் பிரதானக் காரணமாகும். சீனாவின் கட்டுப்பாடுகளால் சர்வதேச அளவில் வெள்ளி சப்ளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

வெள்ளி
வெள்ளி என்பது தங்கத்தை போல இல்லை. தங்கத்திற்குத் தொழில்துறையில் எந்தவொரு பயனும் இல்லை. ஆபரணம் செய்து அணிவதும், சேமிப்பாக வைப்பதும் மட்டுமே தங்கத்திற்கான ஒரே பயனாகும். ஆனால், வெள்ளிக்கு அப்படி இல்லை. தொழிற்துறையில் வெள்ளிக்கு மிகப் பெரிய தேவை இருக்கிறது. தொழில்துறை மற்றும் கிரீன் எனர்ஜி துறைகளில் வெள்ளியின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில் சீனா விதித்துள்ள புதிய தடைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது..
இப்போது ஸ்பாட் சில்வர் விலை ஒரு அவுன்சுக்கு சுமார் 75 டாலராக இருக்கிறது. 80 டாலர் வரை சென்ற வெள்ளி இப்போது 75 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இந்த $76 முதல் $80 என்ற ரேஞ்சிலேயே ஒரு அவுன்ஸ் வெள்ளி வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவிலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை சுமார் ₹2.81 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
சீனா
வெள்ளி விநியோகச் சங்கிலியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது சர்வதேச அளவில் வெள்ளி விநியோகத்தில் 60-70% வரை சீனாவே கட்டுப்படுத்துகிறது. அவர்கள் திடீரென ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததால் விநியோகப் பற்றாக்குறைகள் ஏற்பட்டது. விலை உயர இதுவே பிரதானக் காரணமாகும்.
சீனா இத்தோடு விட்டுவிடவில்லை. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய ஏற்றுமதி உரிம விதிகளையும் அமல்படுத்துகிறது.. இந்த உரிம விதிகள் அமலுக்கு வந்தால் சீனாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இது சர்வதேச வெள்ளி விநியோகத்தில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் வெள்ளை சந்தையில் இது மேலும், பல குழப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க்
வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளி விலை இந்தளவுக்கு வேகமாக உயர்வது நல்லதல்ல என்று எச்சரித்த அவர், தொழில்துறையில் வெள்ளியின் தேவைகளை எடுத்துரைத்தார். மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள் மற்றும் எலக்டிரானிக் என டெஸ்லாவுக்கும் கூட இது முக்கியமானதாக இருக்கும். மேலும், உலகமே கிரீன் எனர்ஜி நோக்கிச் செல்லும் நிலையில், அதற்கும் வெள்ளி பிரதானமாகத் தேவைப்படுகிறது.
வெள்ளி பற்றாக்குறை
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெள்ளிக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது.. வெள்ளியின் தேவை எப்போதும் விநியோகத்தை விட அதிகமாகவே உள்ளது. ஒரு பக்கம் சுரங்க உற்பத்தி மற்றும் மறுசுழற்சி தொடர்ந்து குறைகிறது. இன்னொரு பக்கம் தொழில்துறை பயன்பாடு அதிகரிப்பதால் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மார்கெட் நிலைமை இப்படி இருக்கும் சூழலில், சீனாவின் இந்த கட்டுப்பாடுகள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் வெள்ளி விலையில் ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
-
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications