டிரம்பை கைவிட்ட ஜார்ஜியா நீதிமன்றம்.. மிக்சிகன் கோர்ட்டும் தள்ளுபடி... கடைசியில் இப்படி ஆகிடுச்சு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஜார்ஜியா நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆட்சேபனை தெரிவித்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் பாஸ் தள்ளுபடி செய்தார். இதேபோல் மிக்சினில் போடப்பட்ட வழக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது ஜோ பிடனுக்கு சாதகமாகி உள்ளது.

ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள சவன்னா நகரத்தில் 53 வாக்குகள் சரியான நேரத்தில் பெறப்படவில்லை என்றும் அவற்றை எண்ணுவது ஜோ பிடனுக்கு சாதமாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து டிரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை சாதம் கவுண்டி உயர் நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் பாஸ் ஒரு மணி நேர விசாரணையின் முடிவில் வழக்கை தள்ளுபடி செய்தார். ஏனெனில் 53 வாக்குகளும் சரியான நேரத்தில் பெறப்பட்டதாக மாவட்ட நீதிபதிகள் சாட்சியம் அளித்தால் தள்ளுபடி ஆகியுள்ளது.

Georgia Judge Junks Trump Lawsuit Over Continuing Vote Count as Joe Biden Gains Ground

இதேபோ மிக்சிகன் மாகாணத்திலும் டிரம்ப் தரப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,.மாகாண தலைமை தேர்தல் அதிகாரி ஜோசலின் பென்சன், மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தாலும், உள்ளூர் வாக்கு எண்ணிக்கையை கட்டுப்படுத்தவில்லை என்று கூறி டிரம்ப் தரப்பு மிக்சின் மாகாணத்தில் வழக்கு தொடத்தது.

ஆனால் கடைசி வாக்குகள் எண்ணப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக நீதிபதி சிந்தியா ஸ்டீபன்ஸ் வழக்கு தள்ளுபடிக்கான காரணத்தை குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+