லாட்டரியில் ரூ.82 கோடி பரிசு.. செலவு செய்ய கேர்ள் பிரண்ட் இல்லையாம்.. வருத்தத்தில் ஜெர்மனி நபர்!
வாஷிங்டன்: லாட்டரியில் ரூ.82 கோடி பரிசு விழுந்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியடைந்த ஜெர்மனி நபர், ஊர் சுற்ற கேர்ள் பிரண்ட் இல்லாமல் கவலையடைந்துள்ளார். லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்த அளவுக்கு கேர்ள் பிரண்ட் விஷயத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லையே என்று புலம்பாத குறையாய் கூறி வருகிறார் அந்த நபர்.
லாட்டரியில் பரிசு விழுவதெற்கெல்லாம் கண்டிப்பாக கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைதான்.
வருடக் கணக்கில் லாட்டரி வாங்கி ஒரு ரூபாய் கூட வெல்லாதவர்களும் இருக்கிறார்கள்... வாங்கிய ஒரே லாட்டரிக்கும் பல கோடி பரிசு அடித்து கோடீஸ்வரர் ஆனவர்களும் இருக்கிறார்கள்.

லாட்டரியில் பரிசு பெற்றவுடன்..
இதேபோல் லாட்டரியால் பல ஆயிரங்களை இழந்தவர்களும் இருக்கிறார்கள்.. பல லட்சங்களை பெற்றவர்களும் இருக்கிறார்கள். லாட்டரியில் பரிசு பெற்றவுடன் சிலர் தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்வது, தங்கள் கனவுகளை நோக்கி செல்வதற்காக பயன்படுத்துவது என பல நல்ல வழிகளில் செலவிடுகின்றனர். ஒரு சிலரோ ஆடம்பரமாக கார்களை வாங்குவது என பந்தா காட்டும் நபர்களும் இல்லாமல் இல்லை.

அந்த தெரு என்ன விலை.. அந்த ஊர் என்ன விலை
இப்படித்தான் ஜெர்மனியை சேர்ந்த குர்ஷத் யில்டிரிம் என்ற இளைஞருக்கு லாட்டரியில் 10 மில்லியன் யூரோ( இந்திய மதிப்பில் ரூ. 82 கோடி) பரிசாக அடித்துள்ளது. இவ்வளவு தொகை கிடைத்ததாதால் குர்ஷத்திற்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை... கவுண்டமணி ஒரு படத்தில் அந்த தெரு என்ன விலை.. அந்த ஊர் என்ன விலை... என்று கேட்டு அதகளம் பண்ணுவாரே அதேபோலத்தான்... 82 கோடியை வைத்து என்ன செய்வதென்றே தெரியாமல் ஆனந்தத்தில் மிதந்துள்ளார்.

ஊர் சுற்ற கேர்ள் பிரண்ட் இல்லை
உடனடியாக சொகுசு வார்கள், ஆடம்பர வாட்சுகளை வாங்கி குவித்த குர்ஷத், மீதமுள்ள பணத்தை எப்படி செலவிடலாம் என்று யோசித்து இருக்கிறார். தனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இல்லையே என்ற குறையை தீர்க்க முடிவு செய்த குர்ஷத், புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காகாவும் உல்லாசமாக உலகை சுற்றுவதற்காகவும் ஒரு பார்ட்னரை தேடி அலைகிறாராம்.

நம்பிக்கை வைக்கும் ஒரு பெண்ணாக
இது தொடர்பாக குர்ஷத் கூறுகையில், நான் காதலில் விழ விரும்புகிறேன். பயணத்தை விரும்பும் ஒரு பெண்ணாகவும் என்னை திருமணம் செய்ய தயாராகவும் இருக்கும் ஒரு பெண்ணைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். பெண் அழகாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. என்ன நடந்தாலும் என் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அது மட்டும் போதுமானது" என்றார்.

பலரையும் பொறாமையில் ஆழ்த்தி
41 வயதான குர்ஷத் ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். லாட்டரியில் பரிசு கிடைத்ததும் வேலையை விட்டு விலகிய குர்ஷத், ஆடம்பரமான பெராரி ரக கார்களையும் வாட்சுகளையும் வாங்கி குவித்து வருகிறார். தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தான் வாங்கும் பொருட்களை பதிவிட்டு பலரையும் பொறாமையில் ஆழ்த்தி வருகிறாராம்.

கேர்ள் பிரண்ட் விஷயத்தில் அதிர்ஷ்டம் இல்லை
பயணத்தை அதிகம் விரும்பும் குர்ஷ்த் 82 கோடி கிடைத்ததும் உலகம் முழுவதும் தனது கேர்ள் பிரண்டுடன் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்த அளவுக்கு கேர்ள் பிரண்ட் விஷயத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லையே என்று புலம்பாத குறையாய் கூறி வருகிறார் குர்ஷத்.












Click it and Unblock the Notifications