Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 அணு குண்டுகளுக்கு சமம்! மோதினால் மொத்தமும் போச்சு.. பூமி நோக்கி வரும் விண்கல்! நாசா கொடுத்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 100 அணு குண்டுகள் தாக்குதல் நடத்தினால் எந்த அளவு பாதிப்பு பூமிக்கு ஏற்படுமோ அந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பவர் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி மிக நெருக்கமாக வருகிறதாம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விண்கல் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வந்துள்ளது. இந்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்பு உள்ளதா?, நாசா விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

நாம் வாழும் இந்த பூமியாக இருக்கட்டும், பிரபஞ்சமாக இருக்கட்டும்.. மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு பேரதிசயங்களை கொண்டது. பூமி எப்படி தோன்றியது என்பது முதல் சூரியக் குடும்பத்தில் பூமியை போல மனிதன் வாழும் சூழல் கொண்ட வேறு கிரகங்கள் இருக்கின்றனவா? என்பது வரை பெரும் ஆராய்ச்சியே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் இதுநாள் வரை இதற்கான உறுதியான விடை கிடைக்கவில்லை.

meteorite science space

பூமியானது எப்படி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறதோ, அதே போல சூரியனை பல்வேறு கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் சிறுகோள்கள், தூசி, கற்கள் உள்ளிட்டவையும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் மாறுபட்டது. சில கோள்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட சூரியனை சுற்றி வராமல் செல்கின்றன. சூரியனுக்கு சுற்றியுள்ள சில வால் நட்சத்திரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுகின்றன

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல சிறுகோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய கோள்கள் அவ்வப்போது பூமியை கடந்து செல்லும். பெரும்பாலானவை பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போதே எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் அரிதாக விண்கற்கள் பூமி மீது மோதுவதுண்டு. இந்த நிலையில்தான், நாளை பூமிக்கு மிக நெருக்கமக ஒரு விண்கல் வரக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

'ஸ்பேஸ் ராக் 99942 Apophis' என்ற விண்கல் 450*170 மீட்டர் அளவு கொண்டதாம்.இது பூமி மீது விழுந்தால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்து சேதத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனினும், இந்த விண்கல் பூமியில் இருந்து சுமார் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்று விடும் என நிம்மதி கொடுத்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த விண்கல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வந்துள்ளது.

ஏனெனில் 2004 ஆம் ஆண்டு இந்த விண்கலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது முதலே இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கவலைப்பட்டனர். ஆனாலும், விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு வாய்ப்பு இல்லை என நாசாவின் ஆப்ஜெக்ட்ஸ் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேவேளையில், இந்த விண்கல் புவி ஈர்ப்பு விசைப்பகுதி வழியாக கடந்து செல்லும் பட்சத்தில் விண் அதிர்வுகள் அதிகரிக்கும் எனவும், இதனால், மேற்பரப்பில் கடுமையான அதிர்வுகள் இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+