ஹார்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு அளிக்க தயார்.. ஒன்று கூடிய 20 நாடுகள்! ஈரானுக்கு எகிறும் பிரஷர்
வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 20-க்கும் மேற்பட்ட நாடுகள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள், ஹார்முஸ ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கைகளில் எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
ஈரான் -அமெரிக்கா இடையே நடக்கும் போர் மூன்றாவது வாரமாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை முடியுள்ளது. இதனால் எண்ணெய் வர்த்தகம் முடங்கியுள்ளது.

ஒன்று கூடிய 20 நாடுகள்
சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு, எரிவாயு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிக்கப்பட்ட நாடுகள், அந்த பகுதிக்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 20-க்கும் மேற்பட்ட நாடுகள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள், ஹார்முஸ ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கைகளில் எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
பாதுகாக்க தயார்
இந்த நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், முக்கியமாக இந்த கடல் வழித்தடத்தை ஈரான் மூடியிருப்பதை கடுமையாக கண்டித்ததுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளன. ஈரான் இதற்கு என்ன மாதிரியான எதிர்வினையாற்ற போகிறது என்று தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகளின் இந்த கூட்டறிக்கையால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
கடுமையாக விமர்சித்த டிரம்ப்
மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலாடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளஙக்ளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
ஈரானின் இந்த பதிலடி நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபம் அடைந்தார். மற்றொரு பக்கம் நேட்டோ நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், நேட்டோ நாடுகள் கை விரித்ததால், நேட்டோவை காகிதப்புலி என்றும் அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ ஒன்றுமே இல்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ஈரான் அடுத்து என்ன செய்யும்?
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குவதால் அங்கு எண்னெய் வர்த்தகம் முடங்கியுள்ளது. தற்போது கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயார் என்று 22 நாடுகள் கூறியிருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தியை எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக கடக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால், இதற்கு ஈரான் என்ன மாதிரி ரியாக்ட் செய்யப்போகிறது என்று தெரியவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கடந்த 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வெறும் 116 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன. இது வழக்கமாக அவ்வழியாக கடக்கும் கப்பல்களில் 95 சதவீதம் குறைவு ஆகும்.
-
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
10 நாள் தான் டைம்.. உலகமே ஸ்தம்பிக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த போராசிரியர்! -
ஈரான் போர்: தங்கம் விலைக்கு அடுத்தடுத்து செக்.. நாளை சந்தை எப்படி இருக்கும்? -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
ஈரான் விவகாரத்தில் உள்ளே வரும் ரஷ்யா? பெசஸ்கியானுக்கு போனை போட்ட புதின்! பேசியது என்ன? -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி












Click it and Unblock the Notifications