இனி தங்கம் விலையை பிடிக்க முடியாது.. பெரிய இடியை இறக்க போகும் டிரம்ப்! கொஞ்சமாவது வாங்கி வையுங்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இன்னும் 6 நாட்களில் ரெசிப்ரோகல் வரியை அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பை கிட்டதட்ட சர்வதேச வர்த்தக போர் என்றே பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும். டிரம்பால் சர்வதேச சந்தைகள் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் தான் பதவியேற்றது முதலே இஷ்டத்திற்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சுற்றி இருக்கும் கிட்டதட்ட அனைத்து நாடுகள் உடனும் மோதல் போக்கே கொண்டுள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றப்போகிறேன் எனச் சொல்லிக் கொண்டு அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Gold Donald Trump personal finance

டிரம்ப் தடாலடி

இப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் திடீரென அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். உலகில் அதிக கார்களை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் குறைந்த விலையில் கார் கிடைக்க இந்த இறக்குமதி முக்கியமாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது திடீரென டிரம்ப் அறிவித்த இந்த வரி ஆட்டொமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஆனால், ரஜினி ஒரு படத்தில் சொல்வது போல இது வெறும் டிரைலர் தான். மெயின் பிக்சர் அடுத்த வாரம் தான் இருக்கிறது. ஏப்ரல் 2ம் தேதி முதல் டிரம்ப் ரேசிப்ரோகல் வரியை அறிவிக்கப் போகிறார். அதாவது அமெரிக்கா மீது ஒரு நாடு எந்தளவுக்கு வரி போடுகிறதோ.. அதே வரியை அந்த நாடுகள் மீதும் போடுவது தான் ரெசிப்ரோகல் வரி. இந்த வரி அமலுக்கு வந்தால் அது சர்வதேச அளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை

குறிப்பாகத் தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கும். ஏற்கனவே கடந்த சில நாட்களாக டாலர் மதிப்பு சரிந்து, இதர கரன்சிகளின் மதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தங்கம் விலையும் கணிசமாகக் குறைந்து இருந்தது. ஆனால், டிரம்ப் தடாலடியாக 25% வரி என அறிவித்த உடனேயே தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் ரெசிப்ரோகல் வரியும் அமலுக்கு வந்தால் தங்கம் விலை எங்கோ உச்சத்திற்கு நிச்சயம் பறக்கும்.

இது தொடர்பாக ஆக்மாண்டின் ஆராய்ச்சித் தலைவர் ரெனிஷா சைனானி கூறுகையில், "இப்போது டிரம்பின் ஆட்டோமொபைல் வரியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தியது. இந்தச் சூழலில் அடுத்த வாரம் முதல் ரெசிப்ரோக்கல் வரியும் அமலுக்கு வருகிறது. அது தங்கம் விலை புதிய உச்சம் தொடக் காரணமாக இருக்கும்" என்றார்.

இனி தங்கம் விலை நிற்காது

ஏற்கனவே இந்தாண்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை 15% வரை அதிகரித்துவிட்டது. இந்தச் சூழலில் இன்னும் 6 நாட்களில் ரெசிப்ரோக்கல் வரி அமலுக்கு வரும் நிலையில், அது நிச்சயம் தங்கம் விலையை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரிக்கும் தங்கம் விலைக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

டிரம்ப் இதுபோல வரியை அதிகரித்தால் இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும். மற்ற நாடுகளும் பதிலடியாக வரிகளை அறிவிக்கும். இதனால் கிட்டதட்ட ஒரு வரிப் போர் உருவாகும். இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை ஏற்படும்போது பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். இதுவே விலை ஏற காரணமாக இருக்கும். இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் டிரம்பின் அறிவிப்பைத் தான் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயமும் இருக்கு

மறுபுறம் அமெரிக்காவின் மத்திய வங்கியும் இந்தாண்டு இரண்டு முறை வட்டி விகிதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதுபோல வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அதுவும் தங்கம் விலையை புதிய உச்சத்திற்கே அழைத்துச் செல்லும். இதனால் இந்தாண்டு முழுக்கவே தங்கம் விலை தொடர்ந்து உயரவே செய்யும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+