சூறாவளியில் சிக்கி 6 அமேசான் ஊழியர்கள் பலி – இதயம் உடைந்துவிட்டதாக ஜெஃப் பெசோஸ் உருக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 5 மாகாணங்களில் வீசிய சூறாவளியில் சிக்கி 6 ஊழியர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு தனது இதயம் உடைந்துவிட்டதாக அமேசானின் நிறுவனரும் செயல்தலைவருமான ஜெஃப் பெசோஸ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள கென்டகி, மிசோரி, டென்னசி உள்ளிட்ட 5 மாகாணங்களை அடுத்தடுத்து நான்கு முறை சூறாவளி காற்று தாக்கியது . இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன . சூறாவளியின் கோர தாண்டவத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது .
சூறாவளி தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. சுற்றிச் சுழன்று அடித்த சூறாவளி காரணமாக கவுண்டி பகுதிகளில் கடுமையாக சேதம் ஏற்பட்டதாக கெண்டகி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.மீட்பு பணிகள் அங்கே துரிதப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பெரிய புயல் வெடிப்பு
அமெரிக்க வரலாற்றில் இது மிகப் பெரிய புயல் வெடிப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அமேசான் கிடங்கில் சூறாவளி தாக்கியதில் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இரவு பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் சிக்கியுள்ளவர்களை நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

சிக்கிக் கொண்ட அமேசான் ஊழியர்கள்
உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் எட்வர்ட்ஸ்வில்லே தீயணைப்பு துறையினர் அங்கு மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 45 பேர் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 6 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதயம் உடைந்துவிட்டது - ஜெஃப் பெசோஸ்
தற்போது மீட்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அச்சப்படுவதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் அமேசான் ஊழியர்களின் மரணம் குறித்து ட்வீட் செய்துள்ள அந்த நிறுவனத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான ஜெஃப் பெசோஸ் தனது மனம் உடைந்து விட்டதாகவும், எட்வர்ட்ஸ்வில்லில் இருந்து வரும் செய்தி சோகமானது என பதிவு செய்துள்ளார்.

அமேசான் குழு ஆதரவு
மேலும் எங்கள் ஊழியர்களை இழந்ததற்காக நாங்கள் மனம் உடைந்து உள்ளோம், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களுடன் உள்ளது, அமேசான் குழு அவர்களுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது என்பதை எட்வார்ட்ஸ்வில்லில் இருக்கும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் எனவும், மேலும் இந்த நெருக்கடியின் போது தங்களுக்கு பக்கபலமாக இருக்கும் அனைவருக்கும் எங்கள் முழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications