பாதி மூளையை காணோம்! "ஐயோ" துடிதுடித்து பலியான 2 வயது சிறுவன்! மூக்கில் நுழையும் அமீபாவால் பேராபத்து
வாஷிங்டன்: மூளையை உண்ணும் ஒரு வகை கொடூர அமீபாவால் இரண்டு வயதுக் குழந்தை பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இந்த நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என்று அனைத்துமே மாறி வருகிறது. இதனால் முன்பு அரிதாக ஏற்படுவதாக இருந்த நோய்கள் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

ஏனென்றால் ஒரு பக்கம் நாம் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். மறுபுறம் துரித உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளோம். இது நமது உடலுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
உயிரிழப்பு: அப்படியொரு மோசமான பாதிப்பால் இரண்டு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அவனது மூளையின் ஒரு பகுதி அரிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் நெவாடாவில் இரண்டு வயதுக் குழந்தை உட்ரோ டர்னர் பண்டி கடந்த ஜூலை 19ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தான். அவனுக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவனுக்கு மூளையை உண்ணும் அமீபா என்ற Naegleria fowleri பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
அங்கே நீச்சல் குளத்தில் விளையாடும் போது, இந்த அமீபா அவனது உடலில் புகுந்துள்ளது. இது தொடர்பாக சில உலுக்கும் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். "டர்னர் இன்று அதிகாலை 2:56 மணிக்கு உயிரிழந்தான். கடந்த 7 நாட்களாக அவன் மிகக் கடுமையாகப் போராடினான். இதுவரை இந்த மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டோர் அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர்.
7 நாட்கள் போராட்டம்: ஆனால், டர்னர் 7 நாட்கள் இதை எதிர்த்துப் போராடி இருக்கிறான்.. உலகிலேயே வலிமையான மகன் எனது மகன்தான். அவன் என் ஹீரோ.. எனக்கு இப்படியொரு மகனைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.. எனது மகனை என்றாவது ஒரு நாள் சொர்க்கத்திற்குச் சென்று சந்திப்பேன்" என்று நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம் டர்னருக்கு திடீரென காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு இருக்கிறது. அப்போதுதான் தனது மகனுக்கு ஏதோ மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவரது பெற்றோர் உணர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுவனை அவரது தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். முதலில் அந்த இரண்டு வயதுக் குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் இருக்கலாம் என்றே மருத்துவர்கள் கருதினர்.
அதன் பிறகு நடத்தப்பட்ட சோதனையிலேயே அவருக்குக் கொடிய மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு சமீப காலமாக பெரும் கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பாதிக்கப்படுவோரின் 96% பேர் உயிரிழந்துவிடுவார்கள் என்பதில் இருந்தே இது எந்தளவுக்குக் கொடூரமானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஏன் கொடூரமானது: Naegleria fowleri- நெக்லேரியா ஃபோலேரி என்பது ஒரு வகை ஒற்றை உயிரணு அமீபா ஆகும்.. இது பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகள் போன்ற சூடான நன்னீர் இருக்கும். இவை பொதுவாக மூக்கின் வழியாக நமது உடலில் நுழைந்து மூளையைத் தாக்கும். இதன் காரணமாகவே இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான நோயாகும், இருப்பினும், இது எப்போதும் மிக மிக ஆபத்தானது.
இந்த நெக்லேரியா ஃபோலேரி நமது மூக்கின் வழியாக நுழைந்தால் மட்டுமே இந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் இந்த நீரைக் குடித்தால் நமக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு ஏற்பட்டால் 12 நாட்களில் இதற்கான அறிகுறிகள் ஆரம்பிக்கும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, வலிப்பு, கோமா ஆகியவை அதன் அறிகுறிகள். நோய் பாதிப்பு ஏற்பட்டு 18, 19 நாட்களில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications