பீர் கொடுத்து மாடுகளை வளர்க்கும் மார்க்..! உலகின் பெஸ்ட் மாட்டுக்கறியை உருவாக்க திட்டமாம்
வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது புதிதாக மாடுகளை இறைச்சிக்கு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாடுகளுக்குப் பல லட்சம் மதிப்பிலான உணவுகளைத் தருகிறாராம்.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் இணைய உலகில் முக்கியமானவர். இன்று நாம் இணையத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை வடிவமைத்தவர்களில் மார்க் பங்கு முக்கியமானது. இப்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் எனப் பல நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார்.

வேலைப்பளுவுக்கு நடுவிலும் மார்க் ஜூக்கர்பெர்க் தனக்குப் பிடித்ததைச் செய்யத் தவறுதே இல்லை. கட்த காலங்களில் அவர் ரன்னிங், தற்காப்புக் கலையான ஜூஜிட்சுவில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே இப்போது அவரது ஆர்வம் மாடுகளை வளர்ப்பது பக்கம் திரும்பியுள்ளது.
பீர்: மாடுகளை வளர்ப்பது மட்டுமல்ல, உலர் பழங்கள் மற்றும் பீர் போன்றவற்றை கொடுத்து.. உலகின் சிறந்த மாட்டிறைச்சியை உற்பத்தி செய்யவே அவர் இதையெல்லாம் செய்கிறார். சரி இந்த மாடுகளை எங்கே வளர்க்கிறார் என கேட்கிறீர்களா.. சூப்பரான வானிலையைக் கொண்டிருக்கும் ஹவாயின் கவாய் தீவில் தான் மாடுகளை வளர்க்கிறார். கவாய் தீவில் ஏற்கனவே மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 50% இடம் சொந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த புதன்கிழமை இது குறித்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கவாயில் உள்ள கோலாவ் பண்ணையில் அவர் வாக்யு மற்றும் அங்கஸ் இன மாடுகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் போகிற போக்கில் இந்த மாடுகளை வளர்க்கவில்லை. மிகச் சிறந்த மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் மாடுகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்.
இதனால் மாடுகளுக்கு அவர் மக்காடமியா உணவைத் தருகிறார். இது விலையுயர்ந்த மக்காடமியா கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும், அந்த நாடுகளுக்கு உள்ளூர் பீரும் கூட உணவாகத் தரப்படுகிறதாம்.
விவசாயி: உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சிகளில் ஒன்றாக மாட்டிறைச்சி இருந்தாலும் கூட அதன் உற்பத்தி என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறுகிய இடத்தில் பல நூறு மாடுகள் வளர்க்கப்படுவதாகவும் அதற்கு உணவுகளும் முறையாகத் தரப்படுவதில்லை எனப் பல புகார்கள் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், தான் இதுபோல மாடுகளை வளர்க்க மாட்டேன் என்றும் ஒரு பொறுப்பான விவசாயியாக இருப்பேன் என்றும் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சிவப்பு எறும்புகள் + மிளகாய் + இஞ்சி.. இந்திய "காய்" சட்னிக்கு சர்வதேச அங்கீகாரம்! நன்மைகள் என்ன
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த முழு செயல்முறையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு ஆண்டும் 2200 முதல் 4400 கிலோ உணவை உண்ணும். இந்த தேவையைப் பூர்த்தி செய்ய எங்களுக்கு நிறைய மக்காடமியா மரங்கள் தேவை.. குறிப்பிடத்தக்க அளவுக்கு மரங்கள் இருக்கும் நிலையில், கூடுதலாக மரங்களை நடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
பெஸ்ட் மாட்டுக்கறி: நாங்கள் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் மாடுகளை வளர்ப்பதை மேம்படுத்தவுள்ளோம். இதன் மூலம் உலகின் மிகச் சிறந்த மாட்டுக்கறியை நாங்கள் ஒரு நாள் உற்பத்தி செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்குச் சிலர் ஆதரவு தெரிவித்தாலும் கூட பலரும் இது சுற்றுச்சூழலை மோசமாக்கும் என்றே பதிவிட்டு வருகின்றனர்.
பெரும் பணக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் தொழிலைத் தாண்டி இதுபோல ஒவ்வொரு ஹாபி இருக்கும். மார்க் மாட்டிறைச்சியை உற்பத்தி செய்கிறார் என்றார் மற்றொரு கோடீஸ்வரரான பில் கேட்ஸ் இதற்கு நேர் எதிரான ஹாபியை கொண்டிருக்கிறார். மாடுகளை வளர்ப்பது புவி வெப்ப மயமாதலுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் மாடுகளை வளர்ப்பதை முழுமையாக விட்டுவிட்டு ஆய்வகங்களில் நேரடியாக மாட்டிறைச்சியை உருவாக்கும் ஆய்வில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications