"பல்பு" மாற்ற ஒரு கோடி சம்பளம்.. குஷியான நெட்டிசன்கள்! கடைசியில் இருக்கு பாருங்க ஒரு ட்விஸ்ட்! அடடே
வாஷிங்டன்: லைட் பல்புகளை மாற்றும் வேலைக்கு சுமார் ஒரு கோடி சம்பளம் வழங்குகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது பெரும்பாலான இளைஞர்களுக்குப் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது.. இப்போதும் பட்டம் படித்த பலரும் கூட படிப்பிற்குச் சம்பந்தமே இல்லாத வேலைகளையே செய்து வருகின்றனர்.
இப்போது ஆன்லைன் டெலிவரி வேலை செய்யும் பலரும் பட்டதாரிகள் தான். இப்படிப் படித்த படிப்பிற்கு உண்டான வேலை கிடைக்காமல் போவதால் அவர்களுக்கு போதிய ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படுகிறது.
லைட் பல்பு: இதனால் எப்படியாவது நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலை வேண்டும் என்பதே பல இளைஞர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்தச் சூழலில் லைட் பல்புகளை மாற்றும் இந்த வேலை குறித்து கேள்விபட்டுள்ளீர்களா.. லைட் பல்புகள் மாற்றுவதெல்லாம் ஒரு வேலையா.. இதுக்கு என்ன சம்பளம் வரப் போகிறது என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். உண்மையில் லைட் பல்புகளை மாற்றும் இந்த வேலைக்கு சுமார் ஒரு கோடி சம்பளம் வழங்குகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
இது உண்மைதான். லைட் பல்புகளை மாற்ற இங்கே இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த வேலை எங்க இருக்குனு சொல்லு போய்விடுகிறோம் என நீங்கள் சொல்வது கேட்கிறது. இந்த வேலைக்குச் சம்பளம் கொட்டி தருகிறார்கள் என்ற போதிலும் இதில் ஏகப்பட்ட ஆபத்துகள் புதைந்து இருக்கிறது. இது குறித்து மேலும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
என்ன வேலை: தினசரி கூலியைப் பெற இந்த உலகில் பல லட்சம் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். அப்படியொரு வேலை தான் இது. ஆமா பல நூறு அடி உரத்தில் இருக்கும் கோபுரத்தில் ஏறி லைட் பல்புகளை மாற்ற வேண்டும்.. இந்த அபாயகரமான வேலைக்கு கை நிறையச் சம்பளம் தருகிறார்கள். இந்த வேலை குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.
இந்த வேலையில் ஒருவர் 1,500-அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறி லைட்களை மாற்ற வேண்டும். இந்த பணியின் பெயர் டவர் லான்டர்ன் சேஞ்சர் என்பதாகும். லைட் பல்புகளை மாற்றுவது சாதாரண வேலை போலத் தெரிந்தாலும் இந்த உயரத்திற்கு ஏறி லைட் பல்புகளை மாற்ற உண்மையாகவே மன உறுதி அதிகம் இருக்க வேண்டும். மேலும், அந்த உயரத்தில் பதற்றப்படாமல் பல்புகளை மாற்ற இவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
ஆபத்துகள்: இது குறித்து ஒருவர் கூறுகையில், ""உண்மையில், இது வீடுகளில் இருக்கும் சாதாரண விளக்கு அல்ல.. டவரில் மேல் இருக்கும் சிறப்பு பல்புகளை. இதை எல்லாராலும் மாற்ற முடியாது.. இந்த உயரமான இடத்தில் இருந்து வேலை செய்யச் சிறப்புத் திறமையும் பயிற்சியும் தேவை. 600 மீட்டர் உயரமுள்ள சிக்னல் டவர்களுக்கான விளக்குகளை மாற்றுவது அவ்வளவு ஈஸியான வேலை இல்லை.
இந்த குறிப்பிட்ட வகையான டவர்கள் வழக்கமான கோபுரங்களில் இருந்தும் மாறுபட்டு இருக்கும். இந்த கோபுரம் மேலே செல்ல மெல்லியதாக மாறிக் கொண்டே இருக்கும். மேலே உச்சியில் உங்களுக்கு ஒரு கயிற்றைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பிற்கு இருக்காது" என்று கூறியுள்ளார்.

ரெடியா இருங்க: முதலில் உயரத்தைக் கண்டு அஞ்சுவோருக்கு இது ஏற்ற வேலை இல்லை. அடுத்து இதில் ஒரு கோபுரத்தில் ஏறி இறங்க சுமார் 6 மணி நேரம் வரை ஆகும். இந்த 1500 அடி உயரக் கோபுரத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், இவ்வளவு உயரத்திற்கு ஏறி இறங்க வேண்டும் என்பதால் அவர்கள் பிட்டாக இருக்க வேண்டும்.
இதில் அதிகபட்சம் நாம் ஒரு கோடி ரூபாய் வரை ஊதியமாகப் பெற முடியும் என்றாலும் அனைவருக்கும் இந்த ஊதியம் கிடைக்காது. அனுபவம், அந்த டவர் எங்கே உள்ளது. அங்கே வானிலை எப்படி இருக்கும். இதனால் ரிஸ்க் எந்தளவுக்கு இருக்கும் என அனைத்தும் கணக்கிட்டே ஊதியம் வழங்குவார்களாம். இப்போ சொல்லுங்க.. இந்த வேலைக்கு வர நீங்க ரெடியாக இருக்கீங்களா...












Click it and Unblock the Notifications