டிரம்பிற்கு "மரண" அடி கொடுத்த 3 முஸ்லீம் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்.. படுதோல்விக்கு என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் அதிபர் டிரம்ப்பின் கட்சி மிக மோசமான ஒரு தோல்வியை அடைந்துள்ளது. அதில் குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய வேட்பாளர்கள் டிரம்ப் கட்சிக்கு மரண அடியைக் கொடுத்துள்ளனர். யார் அவர்கள்.. டிரம்ப் கட்சி படுதோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் அதிபர் தேர்தலில் டிரம்ப் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகும் நிலையில், அவர் அதிபரான பிறகு பல சர்ச்சை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவரை தோற்கடிக்கவே முடியாது என்ற ஒரு இமேஜ் உருவாகி இருந்தது. ஆனால், இப்போது அந்த இமேஜ் தவிடுபொடியாகியுள்ளது.

டிரம்ப் கட்சி படுதோல்வி
இப்போது அங்கு நடந்த தேர்தல்களில் டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் ஜனநாயகக் கட்சிக்காகக் களமிறங்கி, ட்ரம்ப்புக்கு முதல் தோல்வியைப் பரிசளித்துள்ளனர். ஜோக்ரன் மாம்தானி, அப்தாப் பியூரேவால், கசாலா ஃபிர்தௌஸ் ஹாஷ்மி ஆகியோர் தான் அவர்கள்!
இதில் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். மாம்தானியின் தாயார் மீரா நாயர் ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். அவர் முக்கியமான ஆவண படங்களை இயக்கியுள்ளார். அவரது தந்தை மஹ்மூத் மாம்தானி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக இருந்தவர். இவர்களுக்குக் குஜராத்துடன் பாரம்பரியத் தொடர்புகள் உண்டு.
யார் அவர்கள்
ஹாஷ்மி சின்சினாட்டி மாகாண துணை கவர்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் பிறந்தவர். அடுத்து கசாலா ஃபிர்தௌஸ்.. பஞ்சாபி தந்தைக்கும் திபெத்திய அகதித் தாய்க்கும் அமெரிக்காவில் பிறந்த கசாலா இரண்டாவது முறையாக சின்சினாட்டி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாகப் பின்னடைவுகளைச் சந்தித்து வந்த நிலையில், இந்த வெற்றி அக்கட்சிக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக இருக்கிறது.
இந்தத் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், அவரது செல்வாக்கும், ஆதரவும் பரவலாக இருந்தது. நியூயார்க்கில் சுயேச்சையாகப் போட்டியிட்ட கவர்னர் ஆண்ட்ரூ க்யூமோவுக்கு டிரம்ப் ஆதரவளித்தார். மாம்தானி வெற்றி பெற்றால் பெடரல் நிறுத்திவிடுவேன் எனக் கூட சொல்லி டிரம்ப் மிரட்டினார். ஆனாலும், அது எடுபடவில்லை.
வெற்றி
வர்ஜீனியாவில் 61 வயதான ஹாஷ்மி துணைநிலை கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் காமன்வெல்த் மாகாண அலுவலகத்தில் இந்தப் பதவிக்கு வரும் முதல் இந்திய- அமெரிக்கர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரபலத் தொழிலதிபர் ஜான் ரீடை அவர் தோற்கடித்தார்.
சின்சினாட்டி மேயரான பியூரேவால், இரண்டாவது முறையாக மேயர் பதவிக்குத் தேர்வானார். அவருக்கு எதிராக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸின் ஒன்றுவிட்ட சகோதரரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான கோரி போவ்மன் போட்டியிட்டார். இருப்பினும், அவரையும் கூட பியுரேவால் தோற்கடித்தார். இந்த மூன்றும் தேர்தல் முடிவுகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
ட்ரம்ப்பின் செயல்பாடுகளைப் பெரும்பாலான வாக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.. டிரம்ப்பிற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவே மக்கள் இப்படி வாக்களித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கிறது. ட்ரம்ப்பின் வரி நடவடிக்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளை அமெரிக்க மக்கள் ஏற்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications