வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... நடுக்கடலில் தத்தளித்த நாய்க்குட்டி... மீட்டெடுத்த நல்ல உள்ளம்..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றை ஜாக்கப் டூடூயிட் என்பவர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற வள்ளுவரின் குறள் மொழிக்கேற்ப அவர் ஆற்றியுள்ள காரியம் புளோரிடா மாகாண மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

In America, Young man rescued a puppy in the middle of Atlantic sea

கடல் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் மிகுந்த ஜாக்கப் டூடூயிட் என்பவர், தனது நண்பர்களுடன் அட்லாண்டிக் கடற்பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த போது, நாய்க்குட்டி ஒன்று உயிருக்கு போராடிய படி தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறார். இதையடுத்து சற்றும் யோசிக்காமல் தனது உயிரை துச்சமென கருதி கடலுக்குள் குதித்த அவர், நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு படகுக்கு கொண்டு வந்தார்.

அங்கு துண்டுடன் தயாராக இருந்த ஜாக்கப்பின் நண்பர்கள், நாய்க்குட்டியை துவட்டி விட்டனர். நடுக்கடலுக்கு நாய்க்குட்டி வந்தது எப்படி என தெரியாத அவர்கள், நாய்க்குட்டியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பட்டையை பிரித்து பார்த்த போது அதில் அதன் உரிமையாளர் விவரம் இருந்திருக்கிறது.

இதையடுத்து ஜாக்கப் டூடூயிட் இது குறித்து அந்த நபரை அழைத்து தகவல் கூறியதன் அடிப்படையில் நாய்க்குட்டியை மீட்டுச் சென்றிருக்கிறார். படகில் கடல் பயணம் செய்த போது நாய்க்குட்டியை அழைத்துச்சென்றதாகவும் படகிலிருந்து நாய்க்குட்டி கடலுக்குள் தாவியதை தாங்கள் கவனிக்கவில்லை எனவும் அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார்.

தங்கள் செல்லப்பிராணியை பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்தமைக்காக நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும், ஜாக்கப் டூடூயிட் அழைத்து இந்த தகவலை கூறாவிட்டால், நாய்க்குட்டி கடலில் குதித்த நிகழ்வே தங்களுக்கு தெரியாமல் போயிருக்கும் என அந்த நபர் கூறியிருக்கிறார். இதனிடையே கடலில் குதித்து நாய்க்குட்டியை மீட்க ஜாக்கப் டூடூயிட் போராடிய காட்சிகளை அவரது நண்பர்கள் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். இந்தக் காட்சிகளை காணும் செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஆர்வலர்கள் ஜாக்கப் டூடூயிடுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஜாக்கப் டூடூயிட்டை பொறுத்தவரை இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்றும் கடலில் பயணம் செய்வதை அவர் அதிகம் விரும்புவார் எனவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
In America, Young man rescued a puppy in the middle of Atlantic sea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X