ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா 6வது முறையாக தேர்வு.. 184 நாடுகள் அமோக ஆதரவு
வாஷிங்டன்: ஐநா.மனித உரிமைக் கவுன்சிலுக்கு இந்தியா 6 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மூன்று வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்திய நேரப்படி நேற்று இரவு, 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொது சபையில், மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடுகளை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
97 வாக்குகளை பெற்றால் போதும் என்றாலும், இந்தியாவிற்கு 184 ஓட்டுகள் கிடைத்தன.
மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த பேராதரவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயகத்தை காப்பதற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பதற்கும் இந்தியா உறுதி பூண்டுள்ளது. இப்படி ஒரு வலுவான தீர்ப்பை வழங்கியதற்காக அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று, ஐ.நா.வுக்கான இந்திய தூதர், திருமூர்த்தி தெரிவித்தார்.

ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 18 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அர்ஜண்டினா, பின்லாந்து காம்பியா மேசியா பராகுவே கத்தார் சோமாலியா ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன.
18 நாடுகளும் அவர்கள் பெற்ற ஓட்டுக்களும்: பெனின்: 189, தி காம்பியா 186, கேமரூன்: 179, சோமாலியா: 171, மற்றும் எரித்ரியன்: 144. இந்தியா: 184, கஜகஸ்தான்: 184, மலேசியா: 183, கத்தார்: 182, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 180. லிதுவேனியா: 178, மாண்டினீக்ரோ: 178, பராகுவே: 185, அர்ஜென்டினா: 175, ஹோண்டுராஸ்: 172 பின்லாந்து: 180, லக்சம்பர்க்: 180, அமெரிக்கா: 168
47 உறுப்பு நாடுகளின் கவுன்சிலில் உள்ள நாடுகள் புவியியல் ரீதியாக பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:
ஆப்பிரிக்க குழு: 13 இடங்கள்
ஆசிய-பசிபிக் குழு: 13 இடங்கள்
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் குழு: 8 இடங்கள்
மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற குழுக்கள்: 7 இடங்கள்
கிழக்கு ஐரோப்பிய குழு: 6 இடங்கள்.
இதில் இந்தியா ஆசிய-பசிபிக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடாகும்.












Click it and Unblock the Notifications