டிரம்பிடம் ரூ.45 லட்சம் கோடியை கொடுக்கும் மோடி? அமெரிக்காவின் $500 பில்லியன் டீல் சாத்தியமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பேசினார். அதன்பிறகு இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்த அவர் இந்தியா, அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கு உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். 500 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.45.5 லட்சம் கோடியாகும். நம் நாட்டின் சமீபத்திய மத்திய பட்ஜெட்யே 53.5 லட்சம் கோடி தான் எனும்போது டிரம்ப் சொன்ன இந்த டீல் சாத்தியமா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 2 கட்டங்களாக 50 சதவீத வரியை போட்டார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கும் 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் என்று இன்னொரு 25 சதவீதம் என 50 சதவீத வரியை போட்டார். இதனால் நம் நாட்டின் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர்.

நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான பொருட்களின் ஏற்றுமதியை சரிவை சந்தித்தது. இந்த பிரச்சனையை தவிர்க்க அமெரிக்காவும் நம் நாடும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று தொலைபேசி வழியாக பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான வர்த்தகம், செயல்பாடு உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில், ‛‛பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக அவரது கோரிக்கையை அமெரிக்கா ஏற்றது., அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டோம். இதன் மூலம் அமெரிக்கா தற்போதுள்ள 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்கும்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அவர் (பிரதமர் மோடி) ஒப்புக்கொண்டார். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதேபோல் வரி குறைப்புக்கு கைமாறாக இந்தியாவும், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க முன்வரும். அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கு உறுதியளித்துள்ளார்'' என்று கூறியிருந்தார்.

இதில் டிரம்ப் கூறிய 500 பில்லியன் டாலர் என்பது இன்றைய நாளில் இந்திய மதிப்பில் ரூ.45.5 லட்சம் கோடியாக உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.53.5 லட்சம் கோடியாகும். அப்படி பார்த்தால் டிரம்ப் கூறிய டீல் என்பது நம் நாட்டின் ஓராண்டு பட்ஜெட்டில் 85 சதவீதமாகும். இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக தனி நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதுதொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் தான் இந்த தொகையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி, டிரம்பிடம் சரணடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

ஆனால் அதேவேளையில் பிரதமர் மோடியின் பதிவையும் நாம் பார்க்க வேண்டும். அதில், ‛‛ என் அன்பு நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. 'மேக் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கு 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு 1.4 பில்லியன் மக்கள் சார்பாக நன்றி'' என்று மட்டுமே கூறியிருந்தார். மாறாக டிரம்ப் சொன்னது போல் 500 பில்லியனுக்கு அமெரிக்காவடன் வர்த்தகம் செய்வது பற்றி மோடி எதுவும் குறிப்பிடவில்லை.

500 பில்லியன் டாலர் ஒப்பந்தம் தொடர்பான டிரம்பின் கூற்று விவாதத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கூட அதற்கு நம் நாடு இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் டிரம்ப் நம் நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கலாம். இதனால் இதுபற்றி மத்திய அரசின் விளக்கத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். அதேவேளையில் தற்போதைய சூழலில் டிரம்ப் நம் நாட்டுக்கு விதித்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நம் நாட்டுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+