மனைவி, மகன் கண் முன்னே தலை துண்டிக்கப்பட்டு படுகொலை.. அமெரிக்க வாழ் இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த அந்த நபர், மனைவி மற்றும் மகன் கண் முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். சிறிய வாஷிங் மெஷின் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பலர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்கள். அதுபோல படிக்கும் அமெரிக்கர்கள் அங்கேயே செட்டிலாகிவிடுகிறார்கள். அமெரிக்கா பாதுகாப்பான நாடுதான் என்றாலும் கூட அங்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாகவே இருக்கும். சிறு சிறு பிரச்சினைக்குக் கூட கொலை செய்யும் சம்பவங்களும் கூட அங்கு அரங்கேறும்.

கொடூரம்
அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்கு டெக்சாஸ் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயது மோட்டல் மேலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் மெஷின் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொடூரமாகத் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட அந்த நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா நாகமல்லையா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மோட்டல் மேலாளரான அவர், சக ஊழியரால் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த கொடூரமான தாக்குதல் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகன் கண் முன்னே நிகழ்ந்தது.
பகீர் சம்பவம்
இந்தச் சம்பவம் தொடர்பாக 37 வயதான யோர்டானிஸ் கோபோஸ்- மார்டினெஸ் என்பவரை உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஜாமீன் இல்லாத ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த கொலைச் சம்பவம் புதன்கிழமை காலை டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் நடந்தது. அங்கு தான் கொல்லப்பட்ட நாகமல்லையாவும், குற்றஞ்சாட்டப்பட்ட கோபோஸ்- மார்டினெஸும் வேலை செய்து வந்துள்ளனர். அங்கிருந்த வாஷிங் மெஷின் ஒன்று பழுதாகியுள்ளது. இது தொடர்பாகக் கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திர மௌலி நாகமல்லையாவுக்கும் கோபோஸ்-மார்டினெஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த கொடூரம் நடந்துள்ளது.
போலீஸ் சொல்வது என்ன
இது குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், "மற்றொரு மோட்டல் ஊழியர் ஒருவருடன் சேர்ந்து கோபோஸ் ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்து இருக்கிறார். அப்போது அங்குச் சென்ற நாகமல்லையா, பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார். நாகமல்லையா நேரடியாக கோபோஸிடம் பேசாமல், மற்றொருவரை மொழிபெயர்க்க சொல்லியிருக்கிறார். இது தொடர்பாகவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது" என்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து கிளம்பிய கோபோஸ், ஒரு பெரிய கத்தியுடன் திரும்பி வந்து நாகமல்லையாவைத் தாக்கியுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
என்ன நடந்தது?
அந்த ஊழியர் தாக்க ஆரம்பித்தவுடன் நாகமல்லையா ரத்த வெள்ளத்தில் மோட்டல் அலுவலகத்தை நோக்கி ஓடி வந்துள்ளார்.. அங்கு அவரது மனைவியும், 18 வயது மகனும் இருந்துள்ளனர். நாகமல்லையாவை காப்பாற்ற அவர்கள் முயன்றுள்ளனர். இருந்தாலும் முடியவில்லை. நாகமல்லையாவைத் துரத்திய கோபோஸ், அவரது குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications