வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய பெண்.. யார் இந்த ஆர்த்தி பிரபாகர்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியான ஆர்த்தி பிரபாகர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அமெரிக்க அரசின் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அதிபர் தனக்கென நியமிக்கப்பட்டுள்ள அறிவியல் ஆலோசகரிடம் கருத்துக்களை கேட்டுதான் அறிவிப்புகளை வெளியிடுவார்.

இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல் இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருந்த எரிக் லாண்டர் தனது சக ஊழியரை துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி பணியை ராஜினாமா செய்தார்.

ஆர்த்தி பிரபாகர்

ஆர்த்தி பிரபாகர்

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்த பணியிடம் காலியாக இருந்த நிலையில், அதிபரின் அடுத்து அறிவியல் ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் வெள்ளை மாளிகை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதன் விளைவாக இயற்பியலாளர் ஆர்த்தி பிரபாகர் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். இந்த பரிந்துரையை அதிபர் ஜோ பைடன் ஏற்பார் என்றும் வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநராக இவர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 யார் இந்த ஆர்த்தி?

யார் இந்த ஆர்த்தி?

63 வயதாகவும் ஆர்த்தி பிரபாகர் 1959 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த அவர், டெக்சார் நகரத்தில் பள்ளிக் கல்வியை முடித்து இருக்கிறார். கலிபோர்னியா இன்ஸ்டிடியூஃப் ஆஃப் டெக்னாலஜியில் கடந்த 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற ஆர்த்தி, பின்னர் அரசு பணியில் சேர்ந்தார்.

வகித்த பதவிகள்

வகித்த பதவிகள்

1993 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் ஆட்சிகாலத்தின்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் ஆர்த்தி. இந்த பணிக்காக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார். தனது பதவிகாலம் முடிந்த பின்னர் சிலிகான் வேலியில் தனியாக தொழில் தொடங்கிய அவரை, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வு திட்ட நிறுவனமான டார்பாவின் தலைவராக நியமனம் செய்தார்.

முதல் பெண் அறிவியல் ஆலோசகர்

முதல் பெண் அறிவியல் ஆலோசகர்

2012 ஆம் ஆண்டு முதல் 2017 வரை அதன் தலைவராக பதவி வகித்த ஆர்த்தி, ஆக்சுவேட் என்ற லாப நோக்கற்ற அமைப்பு ஒன்றை நிறுவி தலைமை செயலதிகாரியாக பதவி வகித்தார். புதிய அறிவியல் ஆலோசகருக்கான பரிந்துரையை செனட் சபை ஏற்றுக்கொண்டால், இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் மற்றும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

என்ன வேலை?

என்ன வேலை?

அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளி ஆய்வு, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிபர் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க ஆலோசனைகளை வழங்குவது ஆர்த்தி பிரபாகரின் பணி. அமெரிக்காவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சீனா கடும் போட்டியாக உள்ள நிலையில், ஆர்த்தி பிரபாகரின் நியமனம் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது.

English summary
Indian women as US President Joe Biden's news Science advisor - Who is Aarti prabhakar?:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X