டிரம்பை கலங்கடித்த ஈரான்.. அலறும் அரபு நாடுகளால் எகிறிய பிரஷர்.. தென்கொரியாவில் இருந்து வரும் ஆயுதம்
வாஷிங்டன்: ஈரானை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று போரை தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இப்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டிரம்ப் எதிர்பார்த்ததை விட ஈரான் பலமடங்கு அதிகப்படியாக பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இது டிரம்புக்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதால் டிரம்ப் தற்போது தென்கொரியாவில் இருந்து வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை மத்திய கிழக்கு மாற்றி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகின்றன. நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. இன்று 14வது நாளாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கில் அரபு நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அலறும் அரபு நாடுகள்
இந்த நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ளன. அதோடு அமெரிக்காவின் விமானப்படை தளம், ராணுவ தளம், கடற்படை தளங்கள் இந்த நாடுகளில் உள்ளன. இதனால் தான் ஈரான், இந்த நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. மேலும் ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி எனும் கடல் வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எல்என்ஜி கியாஸ் உள்ளிட்டவைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரபு நாடுகளின் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கலில் 'தாட்' - 'பேட்ரியாட்'
எளிதாக ஈரானை வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் நினைத்தது. ஆனால் ஈரானின் இத்தகைய பதிலடியை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. மேலும் மத்திய கிழக்கில் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக அமெரிக்கா வழங்கி இருந்த 'தாட்' மற்றும் 'பேட்ரியாட்' வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. சில அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரபு நாடுகளின் பாதுகாப்புகள் கேள்விக்குறியாக்கி உள்ளது.
2 ஆயுதங்களின் பின்னணி
இந்த தாட் (THAAD) மற்றும் பேட்ரியாட் (Patriot) ஆகிய இரண்டும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட உலகின் மிகச்சிறந்த வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்கள் ஆகும். இவை இரண்டும் எதிரிகளின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா மட்டுமின்றி தனது நட்பு நாடுகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவிடம் இருந்து...
ஈரானிடம் இருந்து எப்படியாவது தங்களை காப்பாற்ற வேண்டும் என்று அரபு நாடுகள் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. இதையடுத்து இதனால் இந்த நாடுகளை பாதுகாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா தனது நட்பு நாடாக உள்ள தென்கொரியாவிடம் இருந்து 'தாட்' மற்றும் 'பேட்ரியாட்' வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை மத்திய கிழக்கிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது அரபு நாடுகளை பாதுகாக்கும் வகையில் செய்யப்படுகிறது.
தென்கொரியா கவலை
இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி தென்கொரியா அதிபர் லீ ''அமெரிக்காவை எங்களால் முழுமையாக எதிர்க்க முடியாது என்பது உண்மை'' என வருத்தம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் '' சர்வதேச மாற்றங்களால் வெளி ஆதரவு எந்நேரமும் இல்லாமல் போகலாம். இதனால் நாம் தற்சார்பை நோக்கி செல்ல வேண்டும்'' என்றார். தற்போது தென்கொரியாவுக்கும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கும் நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. அமெரிக்காவின் தற்போதைய செயல் தென்கொரியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications