'எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா?
வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ், அவரது சகோதருடன் அடுத்த மாதம் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.
Recommended Video
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஜெப் பெசோஸ். உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.
இதுதவிர 'Blue Origin' என்ற நிறுவனம் ஒன்றையும் ஜெப் பேசோஸ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் விண்வெளி பயணங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ப்ளூ ஆரிஜின் நிறுவனம்
இந்த ப்ளூ ஆரிஜின் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் New Shepard என்ற இந்த ராக்கெட் 15 முறை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்முறையாக அடுத்த மாதம் இந்த ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவுள்ளது ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.

விண்வெளிக்குச் செல்லும் ஜெப் பெசோஸ்
இந்த ராக்கெட்டில் தான் 57 வயதாகும் ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். அடுத்த மாதம் 20ஆம் தேதி ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். அவருடன் இணைந்து அவரது சகோதரும் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். New Shepard ராக்கெட் இருவரையும் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அழைத்துச் செல்லவுள்ளது.

ஐந்து வயதிலிருந்து கனவு
இது குறித்து ஜெப் பெசோஸ் கூறுகையில், "எனக்கு ஐந்து வயதாகும்போது இருந்தே விண்வெளிக்குச் செல்வது குறித்து நான் கனவு கண்டுள்ளேன். எனது கனவு தற்போது நினைவாகிறது. ஜூலை 20ஆம் தேதி நான் எனது சகோதரனுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்கிறேன். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது, அது உங்களை முழுவதுமாக மாற்றுகிறது. எனது வாழ்க்கையில் நான் மிகவும் ஆசைப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இது எனக்கு மிகப் பெரிய விஷயம்" என்று அவர் தெரிவித்தார்.

வெறும் 10 நிமிடம் தான்
இந்த பயணம் மொத்தம் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதில் நான்கு நிமிடங்கள் Karman lineக்கு மேலே ராக்கெட் இருக்கும். பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் இருக்கும் எல்லைதான் இந்த Karman line. அதாவது இந்த கோட்டை தாண்டினால் அவர்கள் விண்வெளிக்குச் சென்றதாகப் பொருள். இவர்கள் இருவருடன் மற்றொருவரும் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளனர். அந்த டிக்கெட்டிற்கான ஏலமும் தற்போது நடைபெற்று வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications