காலி சேர்களை பார்த்து பேசிய நெதன்யாகு.. ஐநா சபையில் அவமானம்! வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐநா பொதுசபை கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாடினார். ஆனால் அவரது பேச்சை கேட்க மறுப்பு தெரிவித்து, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நெதன்யாகு பேசுகையில் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நெதன்யாகு பேச மேடைக்கு வந்தபோது, கிட்டத்தட்ட 70% நாற்காலிகள் காலியாவிட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள நெதன்யாகுவுக்கு, அமெரிக்க தவிர வேறு சில நாடுகள் மட்டுமே நட்பாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த 600 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில், இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம்.
எனவே போரை நிறுத்த வேண்டும் என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வந்தன. ஆனால், நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. மட்டுமல்லாது பாலஸ்தீனத்தை நாங்கள் முழுமையாக கைப்பற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து சர்வதேச நாடுகள், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க தொடங்கின. ஒரு காலத்தில் இஸ்ரேலின் நட்பு நாடாக இருந்த பிரிட்டன் கூட இப்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்து இருக்கிறது.
🔴 ÚLTIMA HORA | La mayoría de los países abandonan la Asamblea General de la ONU a la llegada de Netanyahu https://t.co/5QtX3U1mzW pic.twitter.com/oHJvcSNuKP
— EL PAÍS (@el_pais) September 26, 2025
இஸ்ரேலும், அமெரிக்காவும் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகள் மட்டுமே பாலஸ்தீனத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் இன்று ஐநா சபையில் பேச வந்த நெதன்யாகுவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications