வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை ஈஸியா மிரட்டலாம் முடியாது.... தனது உருவப்படத்தை எரித்தவர்களுக்கு மீனா ஹாரிஸ் நெத்தியடி பதில்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சில நபர்கள் தனது உருவப்படத்தை எரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் " என்னை மிரட்டமுடியாது. என்னை மெளனமாக்கவும் முடியாது" என ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

அவர் ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் அவரது உருவப்படத்தை எரித்த நபர்கள் குறித்து மீனா ஹாரிஸ் இவ்வாறு கூறி இருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் பெருகி வருகிறது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, பல கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

கிரேட்டா தன்பெர்க் ஆதரவு

கிரேட்டா தன்பெர்க் ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன். அச்சுறுத்தல் கண்டு பின்வாங்க மாட்டேன் என தெரிவித்தார்.

கமலா ஹாரிஸின் உறவினர்

கமலா ஹாரிஸின் உறவினர்

இதே போல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிசும் தனது ட்விட்டர் பக்கத்தில் ''நான் இப்போதும் விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாகவே இருக்கிறேன். அச்சுறுத்தல் மூலம் தனது நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது என பதிவிட்டார்.

என்னை மிரட்டமுடியாது

என்னை மிரட்டமுடியாது

மீனா ஹாரிசுக்கும், கமலா ஹாரிஸுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் அவர்களது உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சில நபர்கள் தனது உருவபடத்தை எரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்வீட் செய்துள்ள மீனா ஹாரிஸ் " என்னை மிரட்டமுடியாது. என்னை மெளனமாக்கவும் முடியாது" என ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

English summary
Meena Harris, a cousin of Kamala Harris, who shared a photo of some people burning her portrait, said, “I can’t be intimidated. You can't silence me, ”he tweeted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X