வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயப்படாதீங்க.. உலகை அச்சுறுத்தும் ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி: மாடர்னா நம்பிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலக நாடுகள் பயப்பட ஆரம்பித்துள்ள புதிய வகை கொரோனாவான ஓமிக்ரானை பூஸ்டர் தடுப்பூசி மூலம் சரி கட்டும் வேலைகளை செய்ய உள்ளதாக அமெரிக்காவின் மாடர்னா உறுதியளித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ், மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. ஏனெனில் 32 வகைகளில் ஸ்பைக் உருமாற்றம் அடையக் கூடியது ஓமிக்ரான் வைரஸ். இதற்கு இந்த பெயரை ஹூ நேற்றுதான் சூட்டியது.

ஆனால், கவலைக்குரிய வேரியண்ட்டாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்! இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இதுவரை இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்வோரால் ஓமிக்ரான் பல நாடுகளுக்கும் பரவுகிறது என்பதால் பல நாடுகளும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ய ஆரம்பித்துள்ளன. இஸ்ரேல், சுகாதார அவசர நிலை போன்ற கால கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பொருளாதார பீதி

பொருளாதார பீதி

மேலும் புதிய வைரஸ் தொடர்பான அச்சத்தால், இந்தியா உட்பட பல நாடுகளில் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. உலகளாவிய அளவில் பொருளாதாரம் மீண்டும் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஓமிக்ரான், காரணமாக பொருளாதார வளர்ச்சி தடைபடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

ஹூ சொல்வது

ஹூ சொல்வது

புதிய வகை வைரஸ் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆய்வு செய்ய, இன்னமும் பல வாரங்கள் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பூஸ்டர் ஷாட்

பூஸ்டர் ஷாட்

அதேநேரம், கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் வேரியண்ட்டுக்கு எதிராக ஒரு பூஸ்டர் ஷாட்டை உருவாக்க உள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நிறுவனம் கையில் எடுக்கும் மூன்று உத்திகளில் இதுவும் ஒன்றாகும் என்று, மாடர்னா தெரிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் ஒரு உத்தி என்றால், ஏற்கனவே கொடுக்கும் மாடர்னா தடுப்பூசிகளின், அளவை அதிகரித்து வழங்குவது மற்றொரு யுத்தியாகும்.

வியூகங்கள்

வியூகங்கள்

Omicron வேரியண்ட் கவலைக்குரியவை என்ற போதிலும், உருமாறும் கொரோனாவை தடுக்க எங்கள் வியூகத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். அதை நோக்கி முடிந்தவரை வேகமாக நகர்ந்து வருகிறோம், என்று Moderna மருந்து நிறுவன சிஇஓ Stephane Bancel தெரிவித்துள்ளார்.

English summary
The US pharmaceutical company Moderna said Friday it will develop a booster shot against the new Omicron variant of the coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X