புக் படிக்கும்போது குழந்தை அழுதது.. அதான் அமுக்கி கொன்றேன்.. இளந்தாய் பகீர்
குளியல் தொட்டிக்குள் குழந்தையை அமுக்கி கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன், அரிசோனா: சில சைக்கோ-க்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாம கல்யாணம் பண்ணி வச்சா இப்படிதான் அடுத்தவங்க உயிரை அனாயசமா வாங்கி நம்மை பதற வைப்பாங்க.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சாண்ட்லர் என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வரும் இளம் பெண் பெயர் ஜென்னா போல்வெல். வயது வெறும் 19 தான் ஆகிறது. ஆனால் கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பிறந்து ஒரு மாசமே ஆன அந்த குழந்தைக்கு ரெய்னர் என்று பெயர்.
|
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஜென்னா திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு டென்ஷனாக வந்தார். அப்போது என்ன ஏதென்று போலீசார் விசாரித்தனர். அதற்கு ஜென்னா என் குழந்தையை யாரோ கடத்திட்டாங்க, எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க சார் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதையடுத்து போலீசார் அவசர அவசரமாக இது சம்பந்தமான விசாரணையை துவக்கினர்.

'கூல்' ஜென்னா
ஆனால் விசாரணையை ஆரம்பித்தவுடன் ஜென்னாவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதையும் கண்டனர். ஸ்டேஷனுக்குள் ஓடிவந்த போது இருந்த பதட்டம் நேரம் ஆக ஆக குறைய தொடங்கியது. டென்ஷன் குறைந்து கூலாக இருக்கவும், போலீசார் ஜென்னாவிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் குழந்தையை தான்தான் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

இடைஞ்சல்
எப்படி, எதற்காக பெற்ற குழந்தையை கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதனர், அதற்கு ஜென்னா, "நான் புக் படித்து கொண்டிருந்தேன், அந்த குழந்தை ஓயாமல் கத்தி அழுது கொண்டே இருந்தது. எனக்கு ரொம்ப தொந்தரவாகவும், எரிச்சலாகவும் இருந்தது. படிக்க விடாமல் டிஸ்டர்ப் பண்ணி கொண்டே இருந்ததால், கோபம் வந்து, அழுதுகிட்டு இருந்த குழந்தையை தூக்கிட்டு போய் குளியல் தொட்டியில் போட்டு ஒரு நிமிடத்திற்கு ஒரே அமுக்காக அமுக்கி கொலை செய்துவிட்டேன். பிறகு அழுத குழந்தை செத்துவிட்டது என்று தெரிந்ததும், அதை ஒரு பெரிய 'கேரி பேக்கில்' போட்டுக் கொண்டேன்.

சடலம் மீட்பு
பிறகு அதை எடுத்து கொண்டு போய் என் வீட்டுகிட்ட ஒரு பார்க் இருக்கு. அங்க போய் போட்டுட்டு வந்துட்டேன்" என்றார். இதைக் கேட்டதும் ஆடிப்போய்விட்ட போலீசார், ஜென்னா சொன்ன அந்த பார்க்கிற்கு ஓடினார்கள். ஒரு பெரிய கவரில் இருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அம்மா ஜென்னாவையும் கைது செய்தார்கள். அப்போது ஜென்னாவின் செல்போனை போலீசார் ஆராந்தபோது, அதில் கூகுளில் தேடப்பட்ட வாசகத்தை கண்டு உறைந்து நின்றார்கள். அந்த வார்த்தை "குழந்தையை சீக்கிரமாக கொல்வது எப்படி?" என்பதுதான்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications