மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி... அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவதில் சிக்கல்
வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தஹாவூர் ராணா, விரைவில் நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது கடத்தலுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, மும்பையின் தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் போலீசாரால் உயிரோடு பிடிக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, அஜ்மல் கசாப்பும் தூக்கிலிடப்பட்டார்.

அமெரிக்காவில் கைது
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது, நிதியுதவி அளித்தது என முக்கிய குற்றவாளிகள் பலரும் வெளிநாடுகளில் இன்னும்கூட சுதந்திரமாகவே உள்ளனர். அவர்களுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா கடந்த 2009ஆம் ஆண்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது டென்மார்க் மற்றும் இந்தியா மீது தாக்குதல் நடத்த உதவியாக வழக்குப்பதிவு செய்தது.

சிறைத் தண்டனை
டென்மார்க்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அவர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகச் சிறையிலிருந்த அவர், கொரோனா பரவல் காரணமாக முன் கூட்டியே கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் கைது
இதற்கிடையே மும்பை தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைதாகி சிறையில் இருக்கும் மற்றொரு குற்றவாளி டேவிட் ஹெட்லி என்பவர் தஹாவூர் ராணாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். தஹாவூர் ராணாவின் பள்ளி தோழனான டேவிட் ஹெட்லி, இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ராணா லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு நிதி அளித்தாக வாக்குமூலம் அளித்து இருந்தார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீதான வழக்கு நிலுவையிலுள்ளதால் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் இந்தியா கோரியிருந்தது.

எதிர்ப்பு
இந்நிலையில், விரைவில் நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தஹாவூர் ராணா நாடு கடத்தலுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. இதே குற்றச்சாட்டிற்காக அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளார். எனவே, நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றத்திற்காக அவரை நாடு கடத்த முடியாது என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவரது வழக்கறிஞர்கள் கூறுகையில், அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒரு வழக்கில் இந்திய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கவுள்ளது.

அமெரிக்கா ஆதரவு
டேவிட் ஹெட்லியின் வாக்குமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே, இதைக் காரணமாகக் கூறி நாடு கடத்தலுக்குக் கோர முடியாது. இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது" என்றார். இருப்பினும், அமெரிக்க தரப்பு நாடு கடத்தலுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்க அரசு விரைவில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications