வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆண்ட்ரமேடாவில் ஒளிவட்டம்.. விண்வெளி ஆய்வில் மைல்கல்.. ஹப்பிள் தொலைநோக்கியின் வாவ் கண்டுபிடிப்பு!

ஆண்ட்ரமேடா பால்வெளியில் ஒளிவட்டம் இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆண்ட்ரமேடா பால்வெளியில் வாயு போன்ற ஒளிவட்டம் இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆண்ட்ரமேடா விண்மீன் குழு என்பது ஒரு சுருள்வகைப் பால்வெளி ஆகும். இது நமது பூமியில் இருந்து சுமார் 780 கிலோபார்செக்குகள் (2.5 மில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவில் உள்ளது. ஆண்ட்ரமேடா பால்வெளியை, மெசியர் 31 அல்லது எம்31 என்றும் அழைக்கின்றனர். இது நமது பால்வெளியாகிய பால்வழிக்கு (Milkyway Galaxy) மிக அருகில் உள்ள பெரிய பால்வெளியாகும்.

NASA’s Hubble Space Telescope maps Halo around andromeda galaxy

ஆண்ட்ரமேடா பால்வெளியில் சுமார் ஒரு டிரில்லியன் விண்மீன்கள் இருப்பது கடந்த 2006ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சிகளை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆய்வு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அதாவது ஆண்ட்ரமேடா பால்வெளியில் வாயு போன்ற ஒளிவட்டம் இருப்பது நாசாவின் ஹப்பிள் தொலைக்நோக்கியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒளிவட்டத்தில் இரண்டு முக்கிய உள்ளமைகள் மற்றும் தனித்துவமான வாயு குண்டுகள் என ஒரு அடுக்கு அமைப்பு உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். விண்மீனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தின் மிக விரிவான ஆய்வு இதுவாகும்.

பொம்மை ஆம்புலன்ஸ் உதவியால் தாயின் உயிரை காப்பாற்றிய குட்டிப்பையன்.. இந்தகால குழந்தைங்க செம ஸ்மார்ட்!பொம்மை ஆம்புலன்ஸ் உதவியால் தாயின் உயிரை காப்பாற்றிய குட்டிப்பையன்.. இந்தகால குழந்தைங்க செம ஸ்மார்ட்!

"பால்வெளியில் வாயு போன்ற ஒளிவட்டம் நிறைந்திருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு மிக முக்கியமான உந்துசக்தியாக இருக்கும். அதேபோல் சூப்பர்நோவா போன்ற நிகழ்வுகளுக்கும் இது முக்கிய காரணியாக இருக்கும்", என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

விண்வெளி ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆண்ட்ரமேடா விண்மீன் குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பூமியின் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகளை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a landmark study, scientists using NASA’s Hubble Space Telescope have mapped the immense envelope of gas, called a halo, surrounding the Andromeda galaxy, our nearest large galactic neighbor. Scientists were surprised to find that this tenuous, nearly invisible halo of diffuse plasma extends 1.3 million light-years from the galaxy about halfway to our Milky Way and as far as 2 million light-years in some directions. This means that Andromeda’s halo is already bumping into the halo of our own galaxy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X