விக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி
Recommended Video
வாஷிங்டன்: நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு மேல் சுற்றி வந்து லேண்டரை புகைப்படம் எடுக்க நாசா முயற்சிக்கிறது.
4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலவுக்கு சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி இஸ்ரோ அனுப்பியது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர்.

அற்புத நிகழ்வு
இந்த மாதம் முதல் வாரத்தில் ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது. இந்த நிலையில் நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு கடந்த 7-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்தது. இந்த அற்புத நிகழ்வை காண இந்தியாவே தூங்காமல் விழித்திருந்தது.

புகைப்படம்
இந்த நிலையில் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் அங்கு என்ன நிகழ்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை. இதையடுத்து நிலவின் வட்டபாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரானது லேண்டர் நிலவில் தரையிறங்கியதையும் பக்கவாட்டில் விழுந்திருப்பதையும் புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.

லேண்டரை தேடும் முயற்சி
இதையடுத்து லேண்டருடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாசா விஞ்ஞானிகளும் அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் 4 நாட்களுக்குள் நிலவில் இருள் சூழ்ந்துவிடும் என்பதால் லேண்டரை தேடும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.

விஞ்ஞானிகள்
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்ப நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேன்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேல் வலம் வந்து அதை புகைப்படம் எடுக்கவுள்ளது. நாசாவின் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications