செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் பாறை மாதிரிகளை எடுக்கும் நாசாவின் முதல் முயற்சி தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுக்காக பாறை துண்டுகளை சேகரிப்பதன் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
Recommended Video
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் அடியெடுத்து வைத்தது.
அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த பெர்சவரன்ஸ் ரோவர் கருவி செவ்வாயில் பத்திரமாக பிரிந்தது. இந்த நிலையில் இந்த ரோவரை செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் உள்ள ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.

இரு ஆண்டுகள்
இந்த ரோவரானது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அந்த கிரகத்தில் ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்யும் பணிகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே பெர்சவரன்ஸ் கருவியானது செவ்வாயின் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

3.5 பில்லியன் ஆண்டுகள்
இந்த ஆழ்ந்த பள்ளமானது 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30 பாறை மாதிரிகளை பூமிக்கு அனுப்பும் வகையில் நாசா திட்டமிட்டிருந்தனர். பர்சவரன்ஸ் ரோவரில் உள்ள ரோபாட்டிக் துளையிடும் கருவி மூலம் செவ்வாயின் பள்ள பகுதியில் துளையிட்டால் அதில் கிடைக்கும் பாறைத் துண்டுகளை எடுத்து அதுவாகவே ஒரு குழாயில் போடுவதுதான் இந்த பாறை மாதிரி சேகரிப்பு முறையாகும்.

நாசாவின் பெர்சவரன்ஸ்
ஆனால் இந்த முதல் முயற்சியில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கருவி தோல்வி அடைந்தது. இதுகுறித்து நாசாவுக்கு கிடைத்த புகைப்படங்களை பார்க்கும் போது அந்த ரோவர் துளையிட்டு கற்களை சேகரிக்க முயற்சித்துள்ளது. ஆனால் அதற்கான பிரத்யேக டியூப்பில் எந்த சாம்பிளும் சேகரிக்கப்படவில்லை.

துளையிடுவது போல் நடக்கவில்லை
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் இது நாங்கள் எதிர்பார்த்தது போல் நடக்காவிட்டாலும் புதிய ஒரு பகுதியில் துளையிடுவதில் எப்போதும் ஆபத்து அதிகமாக உள்ளது. இந்த திட்டம் குறித்து நிறைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வருங்காலத்தில் பாறைகளின் மாதிரியை சேமிப்பதில் நாங்கள் நிச்சயம் வெற்றி காண்போம் என நம்புகிறேன் என்றார். இந்த துளையிடும் ஆரம்ப கட்ட பணிக்காக 11 நாட்களை எடுத்துக் கொண்ட ரோவர் கருவி.

7 அடி நீளம் கொண்ட டிரில்லிங்
7 அடி நீளம் கொண்ட டிரில்லிங் பைப்பை துளையிட பயன்படுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் ரோவரை அனுப்பிய திட்டம் முதல் பணியாற்றி வந்த விஞ்ஞானிகள் கூறுகையில் இந்த கிரகம் நமக்கு தெரியாததை எப்போதும் கற்று கொள்ள வைக்கிறது. கடினமான வேலையில் சிக்கல்கள் வருவது இயற்கைதான். இந்த முயற்சி வெற்றி கண்டிருந்தால் 1.6 முதல் 3.1 மைல்கள் வரை அதாவது 2.5 முதல் 5 கிலோமீட்டர்கள் வரை பெர்சவரன்ஸ் ஆழத்தில் பயணித்திருக்கும். 8 மாதிரி கற்களை சேமித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications