30 ஆண்டு செயல்பட்டு வந்த.. விண்வெளி டெலஸ்கோப்பில் திடீர் கோளாறு.. என்ன காரணம்? நாசா முக்கிய தகவல்
வாஷிங்டன்: கடந்த 30 ஆண்டுகளாக விண்வெளியில் செயல்பட்டு வந்த ஹப்பிள் டெலஸ்கோப்பில் தற்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் செயல்பட்டு வந்த டெலஸ்கோப்களில் முக்கியமானது ஹப்பிள் டெலஸ்கோப். கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த டெலஸ்கோப்பில், கடந்த சில நாட்களாகத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் நாசா உறுதி செய்துள்ளது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் டெலஸ்கோப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் பேலோட் கம்ப்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. டெலஸ்பகோப்பும் அதனுடன் இருக்கும் கருவிகளையும் நல்ல நிலையிலேயே இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
விண்வெளியில் உள்ள டெலஸ்கோப் மற்றும் அதன் கருவிகளைக் கட்டுப்படுத்துவது, ஒருங்கிணைப்பது மற்றும் அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் தான் போலோட் கம்ப்யூட்டரின் பணி. கடந்த திங்கள்கிழமை போலோட் கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்ய முறய்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருப்பினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது.
Memory Module பழையதாகிவிட்டதால் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கும் என நாசா கணித்துள்ளது. பேக்அப் Memory Moduleஐ செயல்படுத்த எடுத்த முயற்சியும் தோல்வியடைந்ததாக நாசா கூறியுள்ளது.
Recommended Video
இந்த ஹப்பிள் டெலஸ்கோப் 1990ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. வானியல் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய இந்த ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் சூரிய குடும்பம், பால்வெளி, விண்மீன் திரள்கள் குறித்துப் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த ஆண்டு பிற்பகுதியில் ஜேம்ஸ் வெப் (James Webb Space Telescope) என்ற டெலஸ்கோப் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications