உக்ரைன் எல்லையில் படைகள் வாபஸ் இல்லை.. கூடுதல் படைகளை குவிக்கிறது ரஷ்யா.. நேட்டோ, அமெரிக்கா புகார்
வாஷிங்டன்: உக்ரைன் எல்லை அருகே கூடுதல் படைகளை ரஷ்யா குவித்து வருவதாக நேட்டோவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகிறது.
Recommended Video
நேட்டோ கூட்டமைப்பில் இணைய சோவியத் நாடான உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் பக்கம் நிற்கின்றன.
இந்த நிலையில் உக்ரைன் எல்லையான கிரிமியாவில் ரஷ்யா பீரங்கி டாங்கிகள், படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் நிலவுவதாக அமெரிக்கா தெரிவித்தது. உக்ரைன் மீது போர் புரிந்தால் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்யா
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டால் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்த ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை ரஷ்யாவும் உறுதி செய்தது.

உக்ரைன்
உக்ரைன் மீது நிச்சயமாக போர் புரியும் எண்ணமில்லை என்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்திருந்தார். நேற்று காலை உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டது.

புதின் கருத்து
புதன்கிழமையான நேற்றைய தினம் ரஷ்யா உக்ரைன் மீது போர் புரியும் அச்சம் நிலவிய நிலையில் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி, அந்நாட்டு தேசிய கீதத்தை பாடியபடி ஒற்றுமையை காட்டினர். உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது இதுவரை இந்த நாடு பார்த்ததில்லை என ரஷ்யா மீது உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது. ஆனால் ரஷ்யாவோ அதை மறுத்தது.

உக்ரைனில் ரஷ்ய படைகள்
இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை என்றும் கூடுதல் படைகள் குவிக்கப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில் உக்ரைன் எல்லையை நோக்கி ரஷ்ய படைகள் பயணிக்கின்றன. அங்கிருந்து படைகள் திரும்ப பெறப்படவில்லை.

கூடுதல் படைகளை குவிக்கும் ரஷ்யா
ரஷ்யா சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. எல்லையிலிருந்து எந்த படைகளும் திரும்ப பெற்றதை நாங்கள் பாரக்கவில்லை. ஆபத்தான ஆயுதங்களை கொண்ட படைகள் எல்லை நோக்கி முன்னேறி வருகின்றன. இதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.

கூடுதல் படைகள் குவிப்பதாக நேட்டோ புகார்
அது போல் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் கூறுகையில் எல்லையில் படைகளை அதிகரிப்பதைதான் நாங்கள் பார்க்கிறோம். எல்லை நோக்கி கூடுதல் படைகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதுவரை ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை. ரஷ்ய படைகளை திரும்ப பெறவில்லை என்ற உண்மையை செயற்கைகோள் படங்கள் மூலம் எங்களால் நிரூபிக்க முடியும் என்றார். ரஷ்ய படைகள் திரும்ப பெறப்பட்டதால் போர் பதற்றம் தணிந்த நிலையில் தற்போது நேட்டோ, அமெரிக்கா கூறுவதை பார்த்தால் அங்கு பதற்றம் தணியவில்லை என்றே தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications