முடங்கிய அமெரிக்கா.. டிரம்பிற்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்! நொடிக்கு நொடி எகிறிய பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியேற்றம், கல்வி மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள், லண்டன் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த இந்த போராட்டத்தில் பல நூறு பேர் திரண்டனர். டிரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதாகச் சொல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதிபராகப் பதவியேற்றது முதல் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வெளிநாட்டினருக்கு எதிரான குடியேற்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுத்த டிரம்ப், பின்னர் சட்டப்பூர்வமாக நுழைந்தோருக்கு எதிராகவும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார்.

டிரம்ப் சர்ச்சை
அதோடு மட்டுமின்றி, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை, பல்கலைக்கழக நிதியை முடக்குவது, பல மாகாணங்களில் ராணுவத்தைக் களமிறக்குவது எனத் தொடர்ந்து சர்ச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அவரது நிர்வாகத்தின் நடவடிக்கைகள், சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் வகையில் இருப்பதாகப் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
வெடித்த போராட்டங்கள்
இந்தச் சூழலில் தான் டிரம்பிற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இங்கு யாரும் மன்னர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடக்கு வர்ஜீனியாவில், வாஷிங்டனுக்கு செல்லும் மேம்பாலங்களில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டனர். அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவைப் போலவே லண்டனிலும் கூட இந்த பேரணிகள் நடந்தன. மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் இதேபோன்ற லண்டனின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே 'நோ கிங்ஸ்' போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்படி உலகம் முழுக்கவே டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. சர்வாதிகார அத்துமீறலுக்கு எதிரான எதிர்ப்பை காட்டவே இந்த போராட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.
டிரம்ப்
அதேநேரம் டிரம்ப் வழக்கம் போல இந்த போராட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்தார். அவர்கள் தன்னை ஒரு மன்னராகக் குறிப்பிடுகிறார்கள் என கூறிய டிரம்ப், தான் மன்னர் இல்லை என்றும் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் தெரிவித்தார். மேலும், அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
வரம்பின் குடியரசுக் கட்சித் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களை விமர்சித்தனர்.. அமெரிக்காவை வெறுக்கும் நபர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு பேரணிகளை நடத்துவதாகச் சபாநாயகர் மைக் ஜான்சன் சாடியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் படுகொலை செய்யப்பட்டதை மேற்கோள் காட்டிய டிரம்ப் ஆதரவாளர்கள், இத்தகைய இயக்கங்கள் அமைதியின்மையைத் தூண்டும் என்று எச்சரித்தனர்.
பாதிப்பு
அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்ற நிலையில், குடியேற்றம் முதல் வரி விவகாரம் வரை பல சர்ச்சை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். டிரம்ப் எப்போது என்ன செய்வார் எனத் தெரியாமல் ஒருவித பதற்றமான சூழலே இருந்து வருகிறது. இது சர்வதேச வர்த்தக உறவுகளைக் கூட பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications