வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் மோசமாகும் பாதிப்பு.. ஒரே நாளில் கொரோனாவால் 2273 பேர் மரணம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2273 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் அமெரிக்காவில் 214,619 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடி 20 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அதே நேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16லட்சத்தை (1,610,705) தாண்டி உள்ளது.

One-day US coronavirus deaths 2273, One-day COVID 19 cases 214,619

அதேநேரம் உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,04,74,262 பேர் நோயில் இருந்து மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 1,99,95,863 பேர் சிசிச்சை பெறுகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,65,43,687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 214,619 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2273 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 305,046 பேர் பலியாகி உள்ளனர்,

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 61 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் 61 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவிற்க அடுத்தபடியாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 98,54,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது பலி எண்ணிக்கை, பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 27,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 332 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா வேகமாக பரவும் நாடுகள் என்றால் பிரேசில் (44,282), துருக்கி (29,136), ரஷ்யா28,137, இந்தியா (27,182), ஜெர்மனி (21,816), இங்கிலாந்து (21,502), இத்தாலி (19,903), பிரான்ஸ் (13,947) ஆகியவை உள்ளன.

English summary
Over 2273 American deaths in a single day, One million new cases in the span of five days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X