"ரொம்ப எக்ஸைட்.." ரஷ்யாவிலிருந்தபடி புல்லரித்த இம்ரான் கான்! கடுப்பான அமெரிக்கா.. கொடுத்த பதிலடி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து கொண்டு 'ரொம்ப எக்ஸைட்டடாக' இருக்கிறது என கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்கா பாடம் எடுத்துள்ளது.

Recommended Video

    Ukraine VS Russia | Ukraine Crisis | மூன்றாம் உலகப்போர் வருமா? | இந்தியா என்ன செய்யப்போகிறது?

    உக்ரைன் ரஷ்யா போர் சூழல் தொடங்கியதுமே பல நாடுகள் அமைதியை விரும்புவதாகவும், போர் சூழல் வேண்டாம் என பேச்சு வார்த்தைக்கு அழைத்தன. ஆனால் பேச்சுவார்த்தை கைகூடாமல் போர் தொடங்கி இருக்கிறது.

    ரஷ்யாவில் இருந்து பிரிந்து வந்து உக்ரைன் தனி நாடானது. தன்னை ஐரோப்பிய நாடாக கருதிய உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோ நாடுகளின் சபையில் உக்ரைன் இணைந்தால் மேற்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்கும், இதனால் ரஷ்யாவுக்கு ஆபத்தாகும் என கருதியது.

     போர்

    போர்

    இதனால் இருநாட்டு எல்லைகளிலும் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும் களத்தில் இறங்கியது. எல்லையில் இருந்து 50 ஆயிரம் வீரர்களை ரஷ்யா திருப்பி அழைத்ததும் போர் வராது என நினைத்தபோது, அமெரிக்க மட்டும் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்று கூறிவந்தது. இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது ரஷ்யா.

     இம்ரான் கான்

    இம்ரான் கான்

    ரஷ்யாவில் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷ்யாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு ரஷ்யா சென்றடைந்த இம்ரான் கானை வரவேற்க ரஷ்ய அதிகாரிகள் தயாராக இருந்தனர். ரஷ்ய அதிகாரி ஒருவரிடம் இம்ரான் கான் "என்ன ஒரு நேரத்தில் நான் வந்துள்ளேன். மிகவும் கிளர்ச்சியூட்டுகிறது" என்று கூறினார். இந்த உரையாடலின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதனால் இம்ரான் கானுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

     அமெரிக்கா

    அமெரிக்கா

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மாஸ்கோ பயணத்திற்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு "பொறுப்பான" நாட்டின் கடமையாகும் என பாகிஸ்தான் பிரதமரை இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா சாடியுள்ளது. மேலும் உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     மறைமுக ஆதரவு

    மறைமுக ஆதரவு

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இது குறித்தும் இம்ரான் கான் ரஷ்யாவில் பேசியிருக்கிறார். மேலும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் குறித்தும் ரஷ்யாவிடம் இம்ரான் கான் விவாதித்திருக்கிறார். போர் சூழலில் பாகிஸ்தான் அதிபர் ரஷ்யாவில் இருப்பதற்கு அமெரிக்கா கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் மறைமுக ஆதரவாகவே இதை நேட்டோ நாடுகள் கருதுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+