2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.. டிரம்ப் தலைமையில்! இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
வாஷிங்டன்: இஸ்ரேல் - காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் உலக தலைவர்கள் ஆதரவுடன் இஸ்ரேல் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் - காசா இடையே போர் மூண்டு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.

காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கடும் இன்னல்களை சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொல்லி வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் வகையில் எகிப்தில் மாநாடுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி இன்று எகிப்து அதிபர் அப்தல் பத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடந்த மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தானது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இன்று இந்த அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து அமைதி பிறந்துள்ளது.
-
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications