ஏலியன்கள் பூமிக்கு வந்தார்களா? மேகத்தில் தோன்றி மலையில் மோதி சிதறிய ஸ்பேஸ் ஷிப்! அதென்ன யூஎஃப்ஓ?
வாஷிங்டன் : அமெரிக்காவின் அலாஸ்கா மகாணத்தில் மலை மீது விசித்திரமான மேகம் தோன்றிய நிலையில் யூஎப்ஒ என அழைக்கப்படும் அடையாளம் காணமுடியாத பறக்கும் பொருள் ஒன்று விபத்துக்குள்ளானதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த உலகில் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள் என்பன போன்ற பேச்சுகள் இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக மக்களிடையே பேசுபொருளாக உள்ளது. இவற்றை கட்டுக்கதைகள் என்றும் ஒதுக்கி விட முடியாது, அப்படியே ஏற்றுக் கொள்ளவும் இயலாது.
அமெரிக்காவில் கடந்த 1966ம் ஆண்டு முதல் முறையாக வானில் பறக்கும் தட்டு போன்ற அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்ததை பார்த்ததாகத் நாட்டு விமானப் படையினர் கூறினார்.

விசித்திர காட்சி
அன்றிலிருந்து இன்று வரை இதே பேச்சுதான் அமெரிக்காவில். இந்நிலையில் வழக்கம் போலவே அமெரிக்காவின் அலாஸ்காவில் சமூக ஊடகங்களில் 'மேகம்' பற்றி அதிகம் பேசப்பட்டது. காரணம் மெரிக்காவின்அலாஸ்கா மகாணத்தில் மலை மீது விசித்திரமான மேகம் தோன்றிய நிலையில் யூஎப்ஒ என அழைக்கப்படும் அடையாளம் காணமுடியாத பறக்கும் பொருள் ஒன்று விபத்துக்குள்ளானதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

பறந்த மர்ம பொருள்
அலாஸ்காவில் ஒரு மலையின் மீது ஒரு வினோதமான மேகம் தோன்றியதால், அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் UFO பூமியில் மோதியதா என்று ஆச்சரியப்பட்டனர். அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள லேசி மவுண்டனுக்கு மேலே மர்மமான மேகம் வியாழக்கிழமை தோன்றியது. உள்ளூர்வாசிகள் சமூக ஊடகங்களில் மேகத்தின் புகைப்படங்களைப் பகிரவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. ரஷ்யாவின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் என பலர் சந்தேகித்தாலும், சிலர் இது ஒரு UFO அல்லது பூமியில் விழுந்த ஒரு விண்கல் என்று நினைத்தனர்.

வேற்று கிரக வாசிகளா?
வேறு சிலரோ விமான விபத்து அல்லது அதி ரகசிய ராணுவ ஆயுதம்தான் விசித்திரமான மேக மூட்டத்திற்கு காரணம் என்று ஐடியாக்களை கூறி வந்தனர். மர்ம மேகம் பல சமூக ஊடகங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் 'மேகம்' பற்றி அதிகம் பேசப்பட்டதால், அதிகாரிகள் அதை சரிபார்க்க வேண்டியிருந்தது. இதனையடுத்து ஒரு மீட்புக் குழு லேசி மலைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் சந்தேகத்திற்குரிய எதையும் கண்டுபிடிக்கவில்லை.

அதிகாரிகள் விசாரணை
இந்த விசாரணையை அலாஸ்கா ஸ்டேட் ட்ரூப்பர்ஸ் மற்றும் அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் நடத்தியதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் மீட்புக் குழு இன்று காலை லேசி மலைப் பகுதியைச் சுற்றி ஒரு பயணத்தை மேற்கொண்டது நிலையிய்ல், சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டறியவோ அல்லது விபத்துக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் விவாதங்களும் தடையின்றி தொடர்ந்தன.

வணிக ஜெட் பறந்ததா?
அந்த இடத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்ட அதே நேரத்தில் ஒரு பெரிய வணிக ஜெட் அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்தது மேலும் விசாரணையில் தெரியவந்தது. நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் , வணிக ஜெட் விமானத்தில் இருந்து கிளம்பிய புகை, ஒளியுடன் இணைந்து இது போன்ற வளிமண்டலக் காட்சியை ஏற்படுத்தியது இறுதியான முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications