அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி கொடுத்த செம கிப்ட்.. இணையத்தில் வைரல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா பிரதமர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாடு நியூயார்க் நகரில் நடக்கிறது.

அமெரிக்காவில் மோடி
இதில் பங்கேற்கும் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.. குவாட் கூட்டமைப்பு தலைவர்களான ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹா ஆகியோரை பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேசினார் மோடி. இதேபோல் அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு உலகம் முழுவதும் பேசும் பொருளானது.

தரமான பரிசு
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குவாட் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்துவமான பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த பரிசுகள் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது பிரதமர் மோடி கமலா ஹாரிசுக்கு, குலாபி மீனாகரி செஸ் செட் பொருளை பரிசாக கொடுத்துள்ளார். இந்த செஸ் செட் உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான காசியுடன் நெருங்கிய தொடர்புடையது.

பி.வி. கோபாலன்
இந்த செஸ் செட்டின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிடத்தக்க வகையில் கைவினை பொருளின் பெருமையை பிரதிபலிக்கின்றன. காசி பிரதமர் மோடியின் தொகுதியை சேர்ந்தது ஆகும். மேலும். கமலா ஹாரிசின் தாத்தாவான பி.வி. கோபாலன் தொடர்பான பழைய அறிவிப்புகளின் நகலை மரத்தாலான கைவினைச் சட்டத்தில் பிரதமர் மோடி கமலா ஹாரிசுக்கு பரிசாக வழங்கினார். மூத்த அரசு அதிகாரியான கோபாலன் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமருக்கு பரிசு
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு மயில் கருப்பொருள் கொண்ட வெள்ளி குலாபி மீனாகரி கப்பலை பிரதமர் பரிசாக வழங்கியுள்ளார். இந்த கப்பல் தனித்தனியாக கைவினை தன்மையை பறைசாற்றுக்குரியது. காசியின் ஆற்றலை பிரதிபலிக்கும் வகையிலும் உள்ளது. இதேபோல் ஜப்பானிய பிரதமர் யோஷிஹிட் சுகாவுக்கு சந்தன புத்தர் சிலையை பரிசாக வழங்கி இருக்கிறார் பிரதமர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications