வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இனி இருண்ட காலம் தான்!" ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்! புலம்பும் சிஇஓ பராக் அக்ரவால்.. என்னாச்சு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது உறுதியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் முக்கிய டெக் நிறுவனங்களில் ஒன்று ட்விட்டர். 140 எழுத்துகளில் அனைத்து கருத்துகளைக் கூறிவிட வேண்டும் என்ற ட்விட்டரின் கான்செப்ட் உலக அளவில் செம ஹிட் அடித்தது.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தின் நிலை சுமூகமாக இல்லை. அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளும் ட்விட்டர் உள்ளிட்ட பல டெக் நிறுவனங்களுக்கு எதிராக முஷ்டியை முறுக்க தொடங்கியுள்ளன.

ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம்தான்! ட்விட்டரை வாங்கிய கையோடு முதல் ட்வீட் போட்ட எலான் மஸ்க் ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம்தான்! ட்விட்டரை வாங்கிய கையோடு முதல் ட்வீட் போட்ட எலான் மஸ்க்

 ட்விட்டர்

ட்விட்டர்

மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனத்திற்கு டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டி கொடுத்து வந்தன. இந்தச் சூழலில் ட்விட்டர் சிஇஓ ஆக இருந்த ஜாக் டோர்சியின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போர்ட் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகக் கடந்த நவம்பர் மாதம் அவர் இசிஓ பொறுப்பில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து புதிய சிஇஓ ஆக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டார்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதனிடையே உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்தே வந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கூறி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அவர் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 எலான் மஸ்க் கையில் ட்விட்டர்

எலான் மஸ்க் கையில் ட்விட்டர்

இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக மறுத்த எலான் மஸ்க் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்குகிறார். இதற்கு ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

 கருத்துச் சுதந்திரம்

கருத்துச் சுதந்திரம்

தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக உள்ள ட்விட்டர் இனி தனிநபர் நிறுவனமாகச் செயல்படும். ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்தைத் தான் நம்புவதாகவும் தன்னை மிக மோசமாக விமர்சிக்கும் நபரும் கூட ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

 இருண்ட காலம்

இருண்ட காலம்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது உறுதியாகி உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவால் ஊழியர்களிடம் கூறியது இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதாவது எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் நிறுவனத்தின எதிர்காலம் நிச்சயமற்றதாக மாற வாய்ப்புள்ளதாக பராக் அக்ரவால் தனது ஊழியர்களிடம் கூறியுள்ளார். டவுன் ஹால் கூட்டத்தில் பேசிய பராக் அக்ரவால், "இந்த ஒப்பந்தம் முடிந்ததும், ட்விட்டர் நிறுவனம் திசையில் பயணிக்கும் என்று எங்களுக்கே தெரியாது" என்று கூறினார்.

Recommended Video

    Elon Musk Buys Twitter Officially For 44 Billion Dollar
     அடுத்து என்ன

    அடுத்து என்ன

    பொதுவாகவே அதிரடி நடவடிக்கைகளிற்கு பெயர்போனவர் எலான் மஸ்க். இப்போது ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கி உள்ளதன் மூலம் விரைவில் அதில் பல அதிரடி மாற்றங்களைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களுடன் ஒரு கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Twitter CEO Parag Agrawal told employees that the future of twitter is under billionaire Elon Musk: (ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவால்) Twitter CEO Parag Agrawal latest about future of twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X