Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்சம் மாற்றி யோசித்த ஆய்வாளர்கள்.. கேன்சருக்கு வந்தாச்சு தடுப்பூசி.. இனி சிக்கல் இல்லாமல் சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய திருப்பமாக, ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இது டியூமர் எனப்படும் புற்றுநோய்க் கட்டிகளுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த வேக்சின் குறித்த ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்தால் நிச்சயம் அது புற்றுநோய் சிகிச்சையில் கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த உலகில் மிகவும் கொடூரமான நோய்களில் ஒன்றாக கேன்சர் கருதப்படுகிறது. கேன்சர் காரணமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேரை இழந்து வருகிறோம். கேன்சருக்கு கதிர்வீச்சு உள்ளிட்ட சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட அதில் இருந்து முழுமையாகக் குணமடைவது எல்லாம் சாதாரணமான காரியம் இல்லை. கேன்சருக்கான மருந்தைக் கண்டுபிடிக்கவே உலகெங்கும் பல ஆய்வுகள் நடந்து வருகிறது.

Revolutionary mRNA Cancer Vaccine A Breakthrough in Universal Cancer Treatment

புற்றுநோய் ஆராய்ச்சியில் திருப்பம்

இதற்கிடையே புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் இதழில் இது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை நோயெதிர்ப்பு செக் பாயிண்ட் இன்ஹிமேட்டர் எனப்படும் நிலையான நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்துகளுடன் இணைந்து பயன்படுத்தும்போது அது எலிகளிடையே புற்றுநோயை எதிர்த்துப் போராடக் கணிசமாக உதவி இருக்கிறது.

டியூமர் இலக்கு இல்லை

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் தடுப்பூசி குறிப்பிட்ட டியூமர் புரதங்களைக் குறிவைக்கவில்லை. அதற்குப் பதிலாக, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒரு வைரஸை எதிர்த்துப் போராடுவது போல் செயல்படுத்துகிறது. டியூமர்களுக்கு பி.டி-எல்1 (PD-L1) எனப்படும் புரதத்தின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இதை அடைய முடிகிறது. இது சிகிச்சைக்கு அதிக பதிலளிக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து குழந்தை மருத்துவப் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். எலியாஸ் சயூர் கூறுகையில், "இப்போது வரை புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு அல்லது கீமோதெரபியை மட்டுமே நம்பியிருக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இந்தச் சிகிச்சை முறை ஒரு புதிய வழியை நமக்குத் தருகிறது" என்றார்.

முதற்கட்ட ஆய்வு

இப்போது எலிகளிடையே மட்டும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களிடம் நடத்தப்படும் ஆய்வுகளிலும் நமக்கு இதேபோன்ற முடிவுகள் கிடைத்தால் அது கேம் சேஞ்சராக இருக்கும். மேலும், சிக்கலான புற்று நோய்களுக்கும் சிகிச்சையளிக்க இது உதவும்.

எலியாஸ் சயூர் மேலும் கூறுகையில், "இந்த வேக்சின் குறிப்பிட்ட டியூமர் அல்லது வைரஸுக்கு எதிராக வேலை செய்வது போல வடிவமைக்கப்படவில்லை. இருந்த போதிலும் இது டியூமர்களுக்கு எதிராகச் சரியான சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதன் மூலம் இந்த வகை வேக்சின்களை நாம் சர்வதேச அளவில் அனைத்து வகையான கேன்சர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தலாம் என்பதையே காட்டுகிறது" என்றார்.

கேன்சர் சிகிச்சை

கேன்சர் என்பது பல வகைப்படும். அவை பல்வேறு வகையான வைரஸ்களால் ஏற்படுகின்றன. இப்போது வரை உலகெங்கும் 200+ வகையான கேன்சர்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைப்படும். இதன் காரணமாகவே சிகிச்சை அளிப்பதில் சவால் இருந்து வருகிறது. இப்போது வரை கேன்சர் தடுப்பூசிக்கு இரு வகைகளில் ஆய்வாளர்கள் முயல்கிறார்கள். ஒன்று கேன்சரால் பாதிக்கப்பட்டோருக்கு எது பொதுவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை வைத்து சிகிச்சை தருவது. மற்றொன்று ஒவ்வொரு நோயாளிக்கும் குறிப்பிட்ட சிக்கலைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற தடுப்பூசியை உருவாக்குவது ஆகும்.

ஆனால், இந்த வகை வேக்சின் மூன்றாவதாக இன்னொரு வழியை முன்வைக்கிறது. அதாவது குறிப்பிட்ட புற்றுநோயைக் குறிவைக்காமல், நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதே இந்த முறையாகும். இதன் காரணமாக ஒருவருக்கு எந்தவொரு புற்றுநோய் ஏற்பட்டாலும் அதற்குச் சிகிச்சை அளிக்க இதை நம்மால் பயன்படுத்த முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+