பலமான ரஷ்யாவிடம் மோதியது தவறு.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெளுத்துவிட்ட டிரம்ப்.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛மிகப்பெரிய சக்தி வாய்ந்த ரஷ்யாவுடன் போருக்கு போய் இருக்க கூடாது. இந்த போரை ஒரு ஒப்பந்தம் மூலம் தடுத்து இருக்கலாம்'' என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விளாசியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் நாடுகள் எல்லைகளை பகிரந்து கொள்கின்றன. இருநாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இதனால் ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முடிவு செய்தார்.

donald trump russia ukraine

இது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. நேட்டோவில் உக்ரைன் சேர்ந்தால் அந்த அமைப்பில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் ரஷ்யா எல்லையில் பணியில் ஈடுபடுவார்கள். இது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நினைத்தார்.

மேலும் உக்ரைனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அந்த நாடு மீது புதின் போரை தொடங்கினார். 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கி இன்னும் தொடர்ந்து வருகிறது. அடுத்த மாதம் வந்தால் போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவு செய்யப்படும். இந்த போரில் ரஷ்யாவை விட உக்ரைன் தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஆனாலும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி விடாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். உக்ரைன் போரை விரைவில் நிறுத்துவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சவூதியை வைத்து மெகா பிளான்.. ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைக்கும் டிரம்ப்.. முடியும் உக்ரைன் போர்?
அதேபோல் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புதின் மற்றும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளனர். இதனால் விரைவில் 3 நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யா என்பது மிகப்பெரிய சக்திவாய்ந்த நாடாக உள்ளது. இந்த நாட்டுடன் உக்ரைன் போருக்கு சென்று இருக்க கூடாது. போருக்கு பதில் இருதரப்பும் ஒரு ஒப்பந்தம் செய்து மோதலை தவிர்த்து இருக்கலாம். இந்த ஒப்பந்தம் மூலம் எளிதில் பிரச்சனையை முடித்து இருக்க முடியும்.

ஆனால் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நான் போராட விரும்புகிறேன் என்று ரஷ்யாவுடன் மோதி உள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையேயான டாங்கி பலம் உள்பட படை பலத்தை ஒப்பிட்டு பார்த்தால் உக்ரைன் போருக்கு சென்றிருக்க வேண்டாம். 2022ம் ஆண்டில் நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் நிச்சயம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தடுத்து இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+