அணு ஆயுதத்தை கையில் எடுத்த ரஷ்யா.. திடீர் பயிற்சி.. அமெரிக்காவின் வார்னிங்.. உச்சக்கட்ட பதற்றம்
வாஷிங்டன்: ரஷ்யா அணுஆயுத பயிற்சி மேற்கொண்ட நிலையில் அமெரிக்காவின் அடுத்தடுத்த எச்சரிக்கையால் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைனுக்கு உலக வங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையே சில ஆண்டுகளாக எல்லை பிரச்சனை உள்ளது. 2014ல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே இருநாடுகளுக்கும் மோதல் போக்கு துவங்கியது. இந்நிலையில் தான் நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் 2021 நவம்பரில் இருந்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.
இதனால் தொடர்ச்சியா போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக உள்ளன. ரஷ்யாவுக்கு, சீனா மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொடர்ந்து ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. உக்ரைன் எல்லையில் தொடர்ச்சியாக படைகளை குவித்து வருகிறது. தரைவழி, வான்வெளி தாக்குதலுக்கு ஏற்ப போருக்கான வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளார்.

அணுஆயுத பயிற்சி
இந்நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் விலாடிமர் புதின் மேற்பார்வையில் அணுஆயுத பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யா தனது அணு ஆயுத பலத்தை காட்டும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சின்போது அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், நவீன போர் ஆயுதங்களை வீரர்கள் பயன்படுத்தினர்.

அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில் தான் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை தடுப்பது தொடர்பாக ஆலோசகர்களுடன் ஜோபைடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ செயலாளர் லாய்டு ஆஸ்டின் கூறுகையில், ‛ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இது தேவையில்லாதது. போர் நடவடிக்கையில் இருந்து புதின் பின்வாங்குவார்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பின்வாங்கும் நடவடிக்கை இல்லை
மேலும் வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் பிசாகி கூறுகையில், ‛‛அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொடர்ச்சியாக உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்னையை உற்று கவனித்து வருகிறார்'' என கூறினார். மேலும் ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ‛‛ரஷ்யா தனது படையை பின்வாங்க வேண்டும். ஆனால் இதுதொடர்பான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை'' என கூறியுள்ளனர். தொடரும் சீரற்ற நிலையால் பிரான்சு, ஜெர்மனி நாடுகளை சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறும்படி அந்நாடுகள் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

அதிபர் அதிருப்தி
இதற்கிடையே முனீச் மாநாட்டில், உக்ரைன் அதிபர் விலாதிமர் ஜிலென்ஸ்கி பேசுகையில், ‛‛உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏறக்குறைய உடைந்துவிட்டன. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த உறுப்பினர்களான ஜெர்மனி மற்றும் துருக்கி இணைந்து உக்ரைனுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு தொடர்பான முந்தைய ஒப்பந்தங்கள் தற்போது செல்லுப்படியாகாது. அவர்கள் அதை ஒதுக்கிவிட்டனர். இந்த விஷயத்தில் தாமதம் என்பது கொரோனாவுக்கு தடுப்பூசி கேட்டால் சளிக்கு மருந்து தருவது போலாகிவிடும் '' என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பிரான்சுடன் பேச்சு
மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வழியாக பிரான்சு அதிபர் இமானுவேல் மாக்ரான் பேசினார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ‛‛ரஷ்யாவின் சட்டபூர்வமான உரிமைகளை புறக்கணிப்பது ஐரோப்பிய கண்டத்தில் மட்டுமல்ல, உலகையும் மோசமாக பாதிக்கும்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விலாதிமர் ஜிலென்ஸ்கி தொலைபேசியில் பிரான்சு அதிபர் இமானுவேல் மாக்ரானுடன் உரையாடி ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து கேட்டுள்ளார்.

உலக வங்கி உதவி
இதற்கிடையே உலக வங்கி உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்த வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், உக்ரைன் அதிபர் விலாதிமர் ஜிலென்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 350 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி உதவி வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். இருப்பினும் உக்ரைன் அதிபர் விலாதிமர் ஜலென்ஸ்கி, ரஷ்யாவுடன் சமாதானமாக செல்ல முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications