வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் படபடவென்று சுட்ட 11 வயது சிறுமி.. 3 பேர் காயம்.. அதிர்ந்த அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் காயமடைந்தனர்.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவையும், துப்பாக்கி கலாசாரத்தையும் ஒருபோதும் பிரித்து விட முடியாது. அங்கு ஏறக்குறைய வாரத்துக்கு மூன்று முறையாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 43,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகுது - நல்ல செய்தி சொன்ன அறிவியல் துறை செயலர்

நீடிக்கும் துப்பாக்கி கலாசாரம்

நீடிக்கும் துப்பாக்கி கலாசாரம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவதை ஒரு "தொற்றுநோய்" என்றும் "சர்வதேச சங்கடம்" என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். துப்பாக்கிகள் கையாளுவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

6-ம் வகுப்பு மாணவி செய்த செயல்

6-ம் வகுப்பு மாணவி செய்த செயல்

ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. வடமேற்கு அமெரிக்க மாநிலமான இடாஹோவில் உள்ள ரிக்பி நடுநிலைப் பள்ளியில் வழக்கம்போல் மாணவர்கள் இருந்தனர். அப்போது 6-ம் வகுப்பு படிக்கும் 11 அல்லது 12 வயது உடைய மாணவி தான் பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்.

3 பேர் காயம்

3 பேர் காயம்

இதனை பார்த்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைவதற்குள் அனைவரையும் சரமாரியாக படபடவென்று சுட ஆரம்பித்த்தாள் அந்த மாணவி. இந்த துப்பாக்கி சூட்டில் உடலில் குண்டு பாய்ந்து 2 மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அந்த மாணவி எதற்காக துப்பாக்கியால் சுட்டார்? என்ற காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சமீபத்திய சில மாதங்களில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு அலுவலக கட்டிடம், கொலராடோவில் ஒரு மளிகைக் கடை மற்றும் அட்லாண்டாவில் உள்ள ஸ்பாக்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A 6th grader at a school in the United States was shot and wounded by 3 people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X