பூமியில் மண் போல.. புதன் கோள் முழுக்க வைரங்கள்.. வியந்து போன விஞ்ஞானிகள்! வெட்டி எடுக்க முடியுமா?
வாஷிங்டன்: பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதனில் அடிப்பரப்பு முழுவதும் வைரங்களால் நிறைந்து காணப்படுகிறது என்று புதிய ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மதிப்பீடுகளின் படி வைரங்கள் இருந்தால், 15 கிலோ மீட்டர் தடிமனுடன் பெரிய அடுக்காக இது உருவாகியிருக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் இதனை வெட்டி எடுக்க முடியுமா என்பது குறித்தும் கூறியுள்ளனர்.
நாம் வாழும் இந்த பூமியை போல சூரிய குடும்பத்தில் உள்ள வேறு ஏதேனும் கோள்களில் உயிர்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனில் தீவிர ஆய்வினை இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

புதன் கிரகம்: சந்திரன் மட்டும் இன்றி செவ்வாய், புதன் உள்ளிட்ட கிரகங்களிலும் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இன்னும் சில தாசப்தங்களில் விண்வெளியில் மனித குடியேற்றம் அமைந்து விடும் என்று விஞ்ஞனிகளும் விண்வெளி ஆய்வாளர்களும் அடித்துக் கூறுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க செவ்வாய், புதன் போன்ற கிரகங்களில் நடக்கும் ஆய்வுகள் மூலம் பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் புதன் கோளில் வைரங்கள் (Diamonds) பெரிய அளவில் அடிப்பரப்பில் இருக்கலாம் என்று புதிய ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
அடிப்பரப்பில் வைரங்கள்: சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் ஆகும். ஆங்கிலத்தில் மெர்குரி என்று அழைக்கப்படும் இந்த புதன் கிரகம் அளவில் மிகச்சிறியது. பூமி சூரியனை சுற்றி வர ஒரு வருடம் எடுத்துக்கொள்ளும் நிலையில், புதன் கிரகம் 88 நாள்களில் சூரியனை சுற்றி வந்துவிடும். சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் மிக வெப்பமான கோளாக இது அறியப்படுகிறது.
இந்த கோளின் அடிப்பரப்பில் பல நூறு மைலுக்கு கீழே வைரங்கள் பெரிய அடுக்குகளாக படிந்து இருக்கலாம் என்று லைவ் சயின்ஸ் என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங்கில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியும், ஆய்வின் இணை ஆசிரியருமான யான்ஹாவ் லின் இந்த தகவலை கூறியுள்ளர். அவர் மேலும் கூறியதாவது:-
கிராஃபைட்: புதனில் அதிக அளவு கார்பன்கள் உள்ளன. எனவே அதன் உட்புறத்தில் ஏதேனும் ஒரு ஆச்சரியம் நடந்திருக்கலாம் என எனக்கு உணர்த்தியது. நமது சூரிய குடும்பத்தின் முதல் கோளான புதனில் காந்தப் புலம் உள்ளது. இருந்தாலும் இது பூமியை விட பலவீனமாகவே உள்ளது. நாசாவின் மேசேஞ்சர் விண்கலம், புதனின் மேற்பரப்பில் சீரற்ற விதத்தில் கறுப்பு பகுதிகள் இருப்பதை கண்டறிந்தது. அது கிராஃபைட் எனப்படும் வகை கார்பன் என அறிய முடிந்தது.
சிலிகேட் கார்பன்: பிற கோள்களை போலவே வெப்பமான லாவா கடல் குளிர்ச்சி அடைந்தே புதன் கிரகமும் உருவாகியிருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்த ஓசோனில் சிலிகேட் கார்பன் ஆகியவை அதிகம் நிறைந்து இருக்கலாம். இந்த கிரகத்தின் வெளிப்புற அடுக்கு மற்றும் இடையடுக்கு எஞ்சியுள்ள மாக்மா படிகமாக்கலில் இருந்து உருவாகியிருக்கலாம் எனவும், கூறினர்.
80 மைல் ஆழத்தில் வைரம்: பல ஆண்டுகளாகவே இடையடுக்கில் உள்ள வெப்பம் மற்றும் அழுத்தம் ஆகியவை கார்பன்கள் கிராபைட் ஆக மாற ஏதுவாக இருந்ததாக சயிண்டிஸ்ட்கள் நம்பி வந்தனர். எனினும் 2019ல் நடத்தப்பட்ட ஆய்வில், புதனில் உள்ள உட்புற அடுக்கு முன்பு நினைத்ததைவிட 80 மைல் ஆழத்தில் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இது உட்புற அடுக்கின் வெப்பம் மற்றும் அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்க உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக கார்பன் வைரமாக மாறும் சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்காலம் என கூறுகின்றனர்.
வெட்டி எடுக்க முடியுமா?: மதிப்பீடுகளின் படி வைரங்கள் இருந்தால், 15 கிலோ மீட்டர் தடிமனுடன் பெரிய அடுக்காக இது உருவாகியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எனினும், இந்த வைரங்களை வெட்டி எடுப்பது என்பது சாத்தியம் இல்லை என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. அதிக வெப்பம் கொண்டதால் 485 கிலோ மீட்டருக்கு அடியில் இந்த டைமண்ட்கள் இருக்கிறது. எனவே இதை வெட்டி எடுப்பது என்பது சாத்தியமற்றது என கூறியிருக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications