ஈரான் ராணுவம் மொத்தமா காலி! கெத்தாக சொன்ன டிரம்ப்! அடுத்த 5வது நிமிடத்தில் இஸ்ரேலுக்கு நேர்ந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானின் ராணுவ பலத்தை 100% காலி செய்துவிட்டதாக டிரம்ப் பெருமையுடன் கூறியிருக்கிறார். ஆனால், அவர் இப்படி சொன்ன அடுத்த 5வது நிமிடத்தில் இஸ்ரேல் நோக்கி ஈரானின் ஏவுகணைகள் பாய்ந்திக்கின்றன.

ஈரானின் புரட்சிகர ராணுவ படையை வீழ்த்தி, அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிளான். இதற்காக கடந்த 2 வாரங்களாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமெனி உட்பட, பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் வெற்றிடையந்திருப்பதாகவும், ஈரான் ராணுவம் 100% வீழ்த்தப்பட்டிருப்பதாகவும் டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

Tel Aviv Under Fire

கெத்தாக பேசி ட்டிரம்

தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) மூடுவதற்கு முயற்சிப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள், அந்தப் பாதையைத் திறந்து வைக்கவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அமெரிக்காவுடன் இணைந்து போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளன.

நாங்கள் ஏற்கனவே ஈரானின் ராணுவத் திறனை 100% அழித்துவிட்டோம். ஆனால், அவர்கள் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப் பாதையில் ட்ரோனை அனுப்புவதோ, கண்ணிவெடியை போடுவதோ அல்லது ஏவுகணையை ஏவுவதோ அவர்களுக்கு எளிதான காரியம்.

சீனாவிடம் கெஞ்சல்

இந்தச் செயற்கைத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் இந்தப் பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன். இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக இருக்காது.

இதற்கிடையில், அமெரிக்கா ஈரானின் கடற்கரைப் பகுதிகளில் மிகக் கடுமையான குண்டுவீச்சை நிகழ்த்தும் மற்றும் ஈரானியப் படகுகள் மற்றும் கப்பல்களைச் சுட்டு வீழ்த்தும். எப்படியாவது, விரைவில் நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான பாதையாக மாற்றுவோம்" என்று கூறியிருந்தார்.

உளறி கொட்டிய டிரம்ப்

டிரம்ப் இப்படி பதிவிட்ட அடுத்த 5வது நிமிடத்தில், இஸ்ரேல் நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இதில் 5-6 ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அம்சத்தை துளைத்துக்கொண்டு உள்ளே சென்று விழுந்திருக்கிறது. நெவாட்டிம் ராணுவ விமான தளத்தை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் பலமாக ஒலித்தன. பொதுமக்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு, செல்போன் எஸ்எம்எஸ் மூலம் அலர்ட் கொடுத்துள்ளது.

எல்லாம் முடிந்துவிட்டது என்று டிரம்ப் சொன்ன பின்னர், ஈரான் பலமாக தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அளவில் ஈரானின் பலத்தையும், அமெரிக்காவின் பலவீனத்தையும் காட்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+