இன்னைக்கு ஒரு பிடி.. உலகின் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகள்.. இந்தியா 5வது.. பெஸ்ட் எந்த நாடு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மிகச்சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலை டேஸ்ட் ஆப் அட்லஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த உணவு வகைகளை ருசிப்பதற்கான உணவு விடுதிகளும் இடம் பெற்றுள்ளன.

உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கு உணவு இன்றியமையாதது. அதற்கு மனிதர்களும் விதி விலக்கு அல்ல.

உலகில் பல்வேறு மொழி, இன கலாசாராங்கள் இருப்பது போல உணவு வகைகளும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.

வித வித உணவு வகைகள்

வித வித உணவு வகைகள்

அந்தந்த நாட்டின் தட்பவெப்பம் அங்கு எளிதில் கிடைக்கும் பொருட்கள் என பல்வேறு காரணிகளை கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் அங்கு வசிக்கும் மக்களின் விருப்ப உணவு மாறுபாடுகிறது. இந்தியாவில் கோதுமை, அரிசி உணவு வகைகள் பிரதான இடம் பெறுகின்றது என்றால் சீனாவில் துரித உணவுகள் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப் படுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மாதிரியான உணவு வகைகள் மாறுபடுகின்றன.

இந்தியா 5-வது இடம்

இந்தியா 5-வது இடம்

ஆனால், எந்த நாட்டில் சிறந்த உணவு வகைகள் இருக்கும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருந்து இருக்கலாம். அந்த சந்தேகத்திற்கு விடையளிப்பது போலத்தான் டேஸ்ட் ஆப் அட்லஸ் என்ற அமைப்பு உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நாடுகளை வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4.54 புள்ளிகள் பெற்று இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. கரம் மசாலா, பாலில் செய்யப்படும் மலாய், நெய், பட்டர் கார்லிக் நான் ஆகியவை சிறந்த ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் 460 வகை உணவுகள் இடம் பெற்றுள்ளன.

450 க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள்

450 க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள்

அதேபோல சிறந்த உணவு வகைகளை சாப்பிடுவதற்கான உணவு விடுதி எவை என்ற விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. மும்பையில் உள்ள ஸ்ரீ தாக்கர் போஜனலே , பெங்களூருவில் உள்ள காரவல்லி, புதுடெல்லியில் உள்ள புகாரா டம் புக்த் உள்பட 450 க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் இந்திய உணவு வகைகளை முயற்சிப்பதற்கான சிறந்த இடங்கள் என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் இத்தாலி

முதல் இடத்தில் இத்தாலி

சிறந்த உணவு வகைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடம் பிடித்துள்ளது. 2-வது இடத்தில் கிரீஸ் நாடும் 3-வது இடத்தில் ஸ்பெயின் மற்றும் 4-வது இடத்தில் ஜப்பானும் உள்ளது. அமெரிக்கா 8-வது இடத்திலும் சீனா 11-வது இடத்திலும் உள்ளது. 43-வது இடத்தில் வங்காளதேசமும் 47-வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. சீனாவின் துரித உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்தப்பட்டியலில் 11-வது இடம் சீனாவுக்கு கிடைத்துள்ளது நெட்டிசன்களுக்கு வியப்பை அளிப்பதாக உள்ளது.

சாப்பிடாத உணவு வகைகளைக் கூட..

சாப்பிடாத உணவு வகைகளைக் கூட..

நெட்டிசன்கள் பலரும் தங்கள் நாட்டில்தான் சிறந்த உணவு வகைகள் கிடைப்பதாகவும் அதில் சந்தேகம் இல்லை என்றும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், இந்தப் பட்டியல் முற்றிலும் தவறானது என்றும் சில நெட்டிசன்களும் இதுவரை நாங்கள் சாப்பிடாத உணவு வகைகளைக் கூட இந்த பட்டியலில் சேர்த்து இருப்பதாகவும் விமர்சித்தும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+