வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயித்துப்போன அமெரிக்க மக்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அரிதான வகையில் வானிலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஏற்படும் மிகவும் அரிதான நிகழ்வாகும் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படும்போது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென காற்று சூடாகும் போது அது விரைந்து மேலெழும்புகிறது. அவ்வாறு காற்று மேலெழும்பும் போது அந்த வெற்றிடத்தை நோக்கி கடல்நீர் எழும்பி வரும்.
அப்போது கடல் பரப்பில் இருக்கும் தவளைகள் மீன்கள் சிப்பிகள் போன்றவை நீருடன் சேர்ந்து மேலெழும்பி காற்றுடன் பயணப்பட்டு சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்கள் மழையாய் பொழியும். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே சிங்கப்பூர் பிரான்ஸ் ஈரான் ஆகிய பகுதிகளை நடைபெற்றதாக தகவல்கள் உள்ள நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இது போன்ற மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெக்சாஸில் மீன் மழை
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் வியாழன் அன்று பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக் கண்டு அங்கு வசித்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து டெக்சாஸின் இந்த சிட்டி ஆப் டெக்சர்கானாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு டெக்சர்கானாவில் மீன் மழை பொழிவது, பல வினோத உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளது எனக் கூறி உள்ளது.

வானிலை மாற்றத்தால் மீன்மழை
இதுபற்றி அந்த மேலும் அந்த பேஸ்புக் பக்கத்தில், விலங்கு மலை என்பது தவளைகள் நண்டுகள் மற்றும் சிறிய மீன்கள் போன்றவை பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் வானியல் மாற்றத்தால் உள்ளிழுக்கப்பட்டு மீண்டும் மழையாய் பொழியும் நிகழ்வு எனவும், மழை பெய்யும் போது அவை கீழே விழுவது மிகவும் அசாதாரணமானது என்றாலும் இன்று பல இடங்களில் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் திகைப்பு
இந்த மழை குறித்து அப்பகுதி வாசிக்கும் ஒருவர் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பன்றிப் பண்ணையில் தவளைகள் மழை பெய்ததாக சொன்னபோது எனக்கு பைத்தியம் பிடித்ததாக அப்பகுதி மக்கள் கூறியதாகவும், தற்போது மீன் மழை பொழிவது பார்த்து என்னை கேலி செய்தவர்கள் திகைத்து நின்றனர் எனவும், இந்த மாற்றத்தால் உலகம் அழிந்து போகிறது என தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள மற்றொரு நபர், மீன் மழையால் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பூனைகள் சந்தோசமாக திரிவதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். சிலர் மீன்மழை குறித்து ஆவணப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் ஊடகவியலாளர்களை அழைத்து சென்று வீடியோவும் எடுத்தனர்.

மக்களுக்கு சுகாதார பிரச்சினை
மீன் மழை ஒருபுறம் ஆச்சரியத்தை அளித்தாலும் துப்புரவு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் தொடங்காவிட்டால் இறந்த நீர்வாழ் விலங்குகளால், மக்களுக்கு உடல்நலம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் விலங்கு மழை பொழிவது இது முதல் முறையல்ல, கலிபோனியா மற்றும் வடமேற்கு செர்பியா போன்ற இடங்களை இதற்கு முன்பு விலங்கு மழை பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications