வெனிசுலா உடன் போர் இல்லை.! திடீரென ட்விஸ்ட் கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.. என்ன காரணம்!
வாஷிங்டன்: வெனிசுலா விவகாரம் இப்போது உலகெங்கும் பற்றி எரிந்து வரும் சூழலில், இது தொடர்பாக டிரம்ப் பல்வேறு முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அந்நாட்டுத் தலைமையின் மோசமான நடவடிக்கையே காரணம் என்றும் பல முறை எச்சரித்தும் தவறுகளைத் திருத்திக் கொள்ளாததாலேயே தாக்குதல் நடத்த வேண்டி இருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
வெனிசுலாவை தாக்கிய அமெரிக்கா அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்திருக்கிறது. அவர் மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதே பலருக்கும் கேள்வியாக உள்ளது. இதற்கிடையே அமெரிக்க ஊடகத்திற்கு டிரம்ப் இது தொடர்பாக விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

வெனிசுலா
வெனிசுலாவுடன் அமெரிக்காவுக்குப் போர் எதுவும் இல்லை என்ற டிரம்ப், அங்கு உடனடி தேர்தல் இருக்காது எனவும் தெரிவித்தார். நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி, அங்குக் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே பிரதானம் என டிரம்ப் வலியுறுத்தினார். வெனிசுலாவில் சிக்கலான சூழல் இருப்பதால் அங்கு 30 நாட்களில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாதது என்றும் டிரம்ப் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முதலில் அந்த நாட்டை (வெனிசுலா) சரிசெய்ய வேண்டும். மக்கள் வாக்களிக்க முடியாதபோது தேர்தலை நடத்த முடியாது. வெனிசுலாவில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்தும். அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை மறுகட்டமைப்பதில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும்.
சீக்கிரம் முடிந்துவிடும்
இந்த மாற்றம் 18 மாதங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த நாட்டை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காகச் சில செலவுகளை அமெரிக்கா மானியமாக வழங்க வேண்டும். ஆனால், எண்ணெய் நிறுவனங்களே முதலீடுகளைச் செய்து, வருவாய் மூலம் அதை மீட்டெடுக்கும்.
யாருடன் போர்?
நான் ஒரு விஷயத்தைத் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. வெனிசுலாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபடவில்லை. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், தங்கல் நாட்டுக் குற்றவாளிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவோர் உடன் தான் போரை நடத்துகிறோம். வெனிசுலாவின் வீழ்ச்சிக்கு அதன் தலைமையே காரணம். பல முறை எச்சரித்தும் அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாததாலேயே இந்த நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது" என்றார்.
யாருடைய கண்ட்ரோல்?
வெனிசுலா இப்போது யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது என்ற கேள்விக்கு டிரம்ப் சிம்பிளாக "என்னுடைய கண்ட்ரோலில்" என்று பதிலளித்தார்.. மேலும், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெனிசுலா தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ரூபியோ ஸ்பானிஷ் மொழியில் சரளமாக அவரிடம் பேசுகிறார் என்றும், இருவருக்கும் மிகவும் வலுவான உறவு உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், "இதுவரை எல்லாமே சரியாகவே போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த ஒத்துழைப்பு முறிந்தால் இரண்டாவது ராணுவத் தாக்குதலுக்கும் அமெரிக்கா தயாராக உள்ளது. நாங்கள் அதைச் செய்யத் தயாராய் இருக்கிறோம். உண்மையில், இரண்டாவது தாக்குதல் தேவைப்படும் என்றே நினைத்தோம். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் தேவைப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
அமைதி திரும்பல
வெனிசுலாவைப் பொறுத்தவரை அங்கு இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. நேற்று திங்கள்கிழமை கூட தலைநகர் காரகாஸின் உள்ள மதுரோ அரண்மனையில் திடீரென டிரோன்களை பறந்தன. அதை அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இருப்பினும், இந்தத் தாக்குதல் தீவிரமானதாக இல்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்றும் தெளிவாகத் தெரியவில்லை,
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications