அமெரிக்காவில் இறங்கிய சீன அதிபர்.. தலைக்கு மேல் பறந்த B-1 விமானங்கள்! டிரம்பின் வரவேற்பை பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பின் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இன்று காலை வாஷிங்டன் வந்து இறங்கிய சீன அதிபருக்கு டிரம்ப் கொடுத்திருக்கும் பிரமாண்டமான வரவேற்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோர் மேரிலாந்தில் உள்ள 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' விமான தளத்திற்கு வந்தடைந்தனர். அங்கு அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் நேரில் சென்று வரவேற்பளித்தனர்.

Trump

சீன அதிபருக்கு 100 அடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை கொடுக்கப்பட்டது. 21 பேர் கொண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் இரு நாடகளின் தேசிய கொடிகளை ஏந்திய வண்ணக் குழுக்கள் இடம்பெற்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் அமெரிக்க ராணுவத்தின் அதிவேக சூப்பர் சோனிக் போர் விமானங்களான 2 B-1 பாம்பர்ஸ்தான். இந்த விமானங்கள் சீன அதிபரை வரவேற்கும் விதமாக விமான தளத்தின் மேல் பறந்தன.

அமெரிக்க அரசியல் வரலாற்றை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். அமெரிக்க அதிபர் ஒருவர் வெளிநாட்டு தலைவரை வரவேற்க நேரடியாக விமான நிலையத்திற்கு செல்வது ரொம்பவும் ரேர். கடைசியாக 1962ம் ஆண்டு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதன் பின்னர் 64 ஆண்டுகளுக்கு பிறகு.. இப்போதுதான் நடக்கிறது.

முன்னதாக டிரம்ப் சீனா சென்றபோது, அவருக்கு அங்கு ரெட் கார்பெட் வரவேற்பு மற்றும் ராணுவ அணிவகுப்புடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. எனவே அதேபோல சிறப்பு வரவேற்பை கொடுக்க வேண்டும் என்றுதான் டிரம்ப் நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து வரவேற்பு கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி, டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இருவருக்கும் இடையே தனிப்பட்ட நட்பு இரக்கிறது. அதனால்தான் டிரம்ப் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்று மெலானியா டிரம்ப் கூறியிருக்கிறார்.

3 நாட்கள் சீன அதிபர் அமெரிக்காவில் தங்கி இருப்பார். இந்த நாட்களில் வர்த்தகம், ஏஐ, செமிகண்டக்கடர், சுங்க வரி, தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச இருக்கின்றனர். இதில் அமெரிக்காவுக்குதான் நெருக்கடி அதிகம். ஏனெனில், அமெரிக்கா.. சீனாவுக்கு சிப்களை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இருந்தாலும் ஏஐ துறையில் சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கவை விட ஓரடி முன்னாள் இருக்கிறது. இதை இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்று கணக்கு போட்ட டிரம்ப், எப்படியாவது சீனாவை வளைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

எனவே இந்த மீட்டிங்கில் டிரம்ப் வைக்கும் கோரிக்கைகளை சீனா பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படி ஏற்கவில்லை என்றாலும் பழி நம்மீது பழி வந்துவிடக்கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். எனவேதான் இந்த தடபுடலாக வரவேற்பை கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+