Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்தி வரும் போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. இந்த போருக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் இக்கட்டான நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை காலை மிக முக்கிய உரையை ஆற்றப் போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தது. ஈரானின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல் நடத்தினர். இதில் ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இருப்பினும், சரணடைய மறுக்கும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. போர் தொடர்வதால் அமெரிக்கா கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

Trump on Middle east crisis US President to Address the Nation With an Iran Update on Thursday

மிக முக்கிய அறிவிப்பு

இதற்கிடையே ஈரான் மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி வியாழன் காலை 6.30 மணி) அந்நாட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட் இது குறித்து தகவலைப் பகிர்ந்தார். அதில் அவர், "டியூன் இன்: நாளை இரவு 9 மணிக்கு, ஈரான் குறித்த முக்கிய அறிவிப்பை டிரம்ப் தேசிய உரையாக வழங்குவார்" எனப் பதிவிட்டுள்ளார்.

மக்கள் கோபம்

அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான ஈரான் மோதல் இரண்டாவது மாதமாகத் தொடர்கிறது. இந்த மோதலுக்கு அமெரிக்காவிலேயே ஆதரவு இல்லை. டிரம்ப் தேவையில்லாமல் இந்த போரை நடத்துவதாகவே அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் டிரம்ப் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்ற, அமெரிக்க வீரர்களை ஈரான் எல்லைக்குள் அனுப்பும் திட்டம் குறித்தும் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். ஒரு வேளை அப்படி யுரேனியம் கைப்பற்றும் திட்டத்தை டிரம்ப் ஆரம்பித்தால் போர் பல நாட்கள் நீடிக்கும். கதிரியக்கப் பொருட்களைப் பிரித்தெடுக்கச் சிறப்புப் படைகள் ஈரானில் களமிறக்கப்படலாம். ஈரான் பகுதிக்குள் இறங்கும் அமெரிக்கப் படையினர், குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். ஏற்கனவே போர் தொடர்பாக அமெரிக்க மக்கள் அதிருப்தியில் உள்ள சூழலில், டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பது கவனம் ஈர்ப்பதாக உள்ளது.

தாக்குதல்கள்

இதற்கிடையே அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை ஈரானின் முக்கிய அணுசக்தி தளம் அமைந்துள்ள நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலால் இஸ்பஹான் அணுசக்தி மையம் உட்பட மூன்று மையங்கள் தாக்கப்பட்டன. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பெரும்பாலும் இங்குதான் உள்ளது என ஆய்வாளர்கள் நம்புவதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

ஈரான் சொல்வது என்ன

இது போன்ற தாக்குதல்களுக்கு நடுவே, ஒரு பக்கம் போர் தொடர்பாக ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பேச்சுவார்த்தை சிறப்பாகவே போய்க் கொண்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, மோதல் தொடங்கியது முதல் டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றார். அதேநேரம் அமெரிக்கா மற்றொரு நாடு மூலம் பேச்சுவார்த்தை கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக ஈரான் கூறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+