Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களால் மாஸ்கோவை தாக்க முடியுமா? புதின் அந்த வலியை உணரணும்.. உக்ரைனுக்கு டிரம்ப் கிரீன் சிக்னல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகவே ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் எவ்வளவோ முயன்றாலும் முடியாத நிலையில், இப்போது அவரே தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு உக்ரைனை அறிவுறுத்தியிருக்கிறார். குறிப்பாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ வரை சென்று தாக்குதல் நடத்துமாறு உக்ரைனுக்கு அவர் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது

உக்ரைன் ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தன்னால் முடிந்த எல்லா விஷயங்களையும் செய்கிறார். ஆனால், இப்போது வரை அந்த மோதல் முடிவுக்கு வந்தது போலவே தெரியவில்லை. உக்ரைன் இதற்கு உடன்பட ரெடியாக இருந்தாலும் கூட ரஷ்யா பிடிகொடுக்க மறுக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் பிடிவாதம் காட்டியே வருகிறார். இது டிரம்ப்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Trump Urges Zelensky to Strike Russia to Pressure Putin Signals Shift in Ukraine Strategy

டொனால்ட் டிரம்ப்

இதற்கிடையே புதின் மீது ஏமாற்றமடைந்தாலும் கூட இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்து இருக்கிறார். அதற்குள் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால் 100% வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

ஒரு பக்கம் இதுபோல எச்சரித்தாலும் கூட மற்றொரு பக்கம் டிரம்ப் தனிப்பட்ட முறையில் உக்ரைனைத் தொடர்பு கொண்டு தாக்குதலைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அல்லது ரஷ்யாவின் முக்கிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை ரஷ்ய எல்லைக்குள் போய் தாக்குதல்களை நடத்த வேண்டும் என உக்ரைனுக்கு டிரம்ப் மறைமுகமாக அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

நேட்டோ உறுப்பு நாடுகள்

மேலும், நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனுக்குப் புதிய ராணுவ உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறாராம். சில மாதங்களுக்கு முன்பு வரை ரஷ்யா உக்ரைன் மோதலில் அமெரிக்கா இனிமேல் தலையிடாது என டிரம்ப் கூறியிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டை டிரம்ப் மாற்றியிருக்கிறார். அதேநேரம் இந்த மாற்றம் திடீரென நடந்தது இல்லையாம். பல முறை முயன்றும் புதின் சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாததாலேயே டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாஸ்கோவை தாக்க முடியுமா?

ஏற்கனவே கடந்த ஜூலை 4ஆம் தேதி இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதே அவர் ரஷ்யாவுக்குள் தொலைதூர இலக்குகளைத் தாக்கக்கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவது குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். குறிப்பாக அந்த போன் காலில் டிரம்ப், "ஜெலன்ஸ்கி, உங்களால் மாஸ்கோவைத் தாக்க முடியுமா? உங்களால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கையும் தாக்க முடியுமா?" என்று நேரடியாகவே கேட்டதாகக் கூறப்படுகிறது. புதின் அந்த வலியை உணர வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.

உக்ரைன் பதில் என்ன

அதற்கு ஜெலென்ஸ்கி, "நிச்சயமாக முடியும். நீங்கள் எங்களுக்கு ஆயுதங்களை மட்டும் கொடுங்கள்.. அதை நாங்கள் செய்து முடிக்கிறோம்" என்று பதிலளித்தார். அதேநேரம் ரஷ்யாவில் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலிமையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், புதின் மீது கடும் அதிருப்தியில் அமெரிக்கா இருப்பது இதில் உறுதியாகிறது.

தற்போதைய சூழலில் மத்திய கிழக்கில் ஓரளவுக்கு அமைதி திரும்பி வருகிறது. உக்ரைன் ரஷ்யா விவகாரம் மட்டுமே நீண்டு கொண்டே செல்கிறது. இந்த மோதல் உலகெங்கும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+