Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட எலான் மஸ்க்.. டிரம்ப் வைக்கும் செக்! புது உத்தரவு பறந்தது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், பிரபல தொழிலதிபரான எலான் மஸக்குக்கும் இப்போது ஏழாம் பொறுத்தம் போல. இருவருக்கும் இடையில் மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கொடுத்து வரும் மானியங்களை பரிசீலனை செய்ய டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.

"நாங்கள் எல்லாவற்றையும் பார்க்க தயாராக இருக்கிறோம். மஸ்க்கிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. இருப்பினும் அவர் நிறுவனங்களுக்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த கணக்குகள் குறித்த விவரங்களை சரிபார்க்க இருக்கிறோம். அது நியாயமாக இருந்தால் மட்டுமே தொடரும்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Trump Elon Musk SpaceX NASA

மானியங்கள் உள்ளிட்ட நிதி சலுகைகள் பல இருந்தாலும், அரசு தரப்பில் எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால்,

கடந்த 2014ல், நாசா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station - ISS) வீரர்களையும் பொருட்களையும் கொண்டு செல்கிறது. இது தவிர, நாசாவின் வணிக பொருள் மறு விநியோக சேவைகள் திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் உடன் கடந்த 2008-2020 வரை பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு 3.1 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும்.

சமீபத்தில் 2021இல், நாசா, ஸ்பேஸ்எக்ஸுக்கு 2.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கியது. இது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக போடப்பட்ட திட்டமாகும்.

பாதுகாப்புத் துறை என்று எடுத்துக்கொண்டால், 'ஸ்பேஸ்எக்ஸ்' அமெரிக்க பாதுகாப்புத் துறையிடமிருந்து செயற்கைக்கோள்ளை ஏவ முன்வந்தது. இதற்காக 2020இல் 316 மில்லியன் டாலர் மதிப்பிலும், 2022இல் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொத்தமாக, 2013 முதல் 2023 வரை, ஸ்பேஸ்எக்ஸ், பாதுகாப்புத் துறையிடமிருந்து 10 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது.

டெஸ்லாவை எடுத்துக்கொண்டால்

மின்சார வாகனங்களுக்கு 7,500 டாலர்களை அமெரிக்க அரசு வரிச் சலுகையை வழங்கியது. இது டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு 2009 முதல் 2020 வரை பயன்படுத்தப்பட்டது. இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டு, அதிக வாகனங்களை டெஸ்லா விற்பனை செய்தது. மொத்தமாக, இந்த வரிச் சலுகைகள் மூலம் டெஸ்லாவின் வாடிக்கையாளர்கள் பல பில்லியன் டாலர் மதிப்பில் சலுகைகளைப் பெற்றனர்.

2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட Inflation Reduction Act மூலம், டெஸ்லாவின் வாகனங்கள் மீண்டும் வரிச் சலுகைகளுக்கு தகுதி பெற்றன. இது நிறுவனத்தின் விற்பனையை மேலும் ஊக்குவித்தது.

தேசிய அளவில் மட்டுமல்லாது, மாகாணங்கள் அளிவிலும் சலுகைகள் வழங்கப்பட்டன. உதாரணத்திற்கு கலிபோர்னியாவில் டெஸ்லா தனது ஃப்ரீமாண்ட் தொழிற்சாலைக்காக இந்த மாகாண அரசிடமிருந்து வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற்றது. 2015இல் கலிபோர்னியாவின் மாநில அரசு $15 மில்லியன் வரிச் சலுகையை வழங்கியது. டெஸ்லாவின் கிகாஃபேக்டரி 1 (Gigafactory 1) கட்டுமானத்திற்காக நெவாடா மாநிலம் $1.3 பில்லியன் மதிப்புள்ள வரிச் சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியது.

ஸ்டார்லிங்க், டெஸ்லா தவிர, நியூராலிங்க், தி போரிங் கம்பெனி, மற்றும் எக்ஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களுக்கும் அமெரிக்க அரசு சலுகைகளை கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த சலுகைகளை நீட்டிப்பது தொடர்பாக அதிபர் டிரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது எலான் மஸ்க் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+